Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ரோம் பேரரசின் முடிவு

மனிதகுல வரலாறு – ரோம் பேரரசின் முடிவு

200 ஆண்டுகள் ரோமில் அமைதி நிலவியது. இந்தக் காலகட்டத்தை பாக்ஸ் ரோமனா என்று அழைத்தனர். அதன்பிறகு மெல்ல மெல்ல ரோம் பேரரசு வீழ்ச் சியடைந்தது. ரோம் ராணுவம் பேரரசின் எல்லையைப் பாது காப்பதற்கு பதிலாக, தங்களுக்குள் சண்டையிடத் தொடங் கியது.

இதுபோதாதா? வெளிநாட்டு ராணுவம் ரோமுக்குள் நுழைய வழி கிடைத்துவிட்டது. அவர்கள் ரோமில் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

விஸிகோத்துகள், ஹுன்கள், ஜெர்மானியர்கள், பெர்சியர் கள், ஸ்லாவியர்கள், அவார்கள் என பல்வேறு வம்சத்தினர் ரோமுக்குள் நுழைந்து அழிவுக்கு அடித்தளமிட்டனர்.

கி.பி. 400களின் பிற்பகுதியில், ரோம் முழுவதும் இந்த வெளிநாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதையடுத்து பேரரசு என்ற அந்தஸ்த்தை ரோம் இழந்தது. கி.பி. 476ல் ஜெர் மனி வீரரான ஒடோஸெர் ரோம் நகரத்தை கைப்பற்றினார். ரோம் பேரரசரைக் கொன்றார்.

பிறகு இத்தாலியின் மன்ன ராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் மன்ன ராக பொறுப்பேற்ற தினத்தைத்தான் ரோம் பேரரசின் வீழ்ச்சி என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply