Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்

மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்க நாகரிகம்

ஆப்பிரிக்கா மிகப்பெரிய கண்டம். ஆப்பிரிக்காவின் பரந்து விரிந்த நிலப் பகுதியில் பல்வேறுபட்ட காடுகளும், நதிச் சமவெளிகளும், பாலைவனங்களும், மேய்ச்சல் நிலங்களுமாக இயற்கை தனது கொடைகள் அனைத்தையும் வாரி வழங்கி இருக்கிறது.

காலங்காலமாக எத்தனையோ விதமான மனித இனங்களும், கலாச்சாரங்களும் இங்கே வளர்ந்து செழித்திருக்கின்றன. மனித இனம் தோன்றியதே ஆப்பிரிக்காவில்தான் என்று தொல்லியல் நிபுணர்கள் கூறு கிறார்கள். தொடக்ககால ஆப்பிரிக்க மக்கள் பற்றிய எழுத்து பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை.

அவர்கள் வாய் மொழியாகவும், கதைகள் வழியாகவுமே தங்கள் வரலாற்றை பதிவு செய்திருக்கின்றனர்.
எழுத்துபூர்வமான சரித்திர ஆவணங்கள் இல்லாததால், இந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்வதில் சிரமம் ஏற் பட்டுள்ளது. எனவே, தங்களால் இயன்ற அளவுக்கு வாய் மொழி வரலாறுகளை தொல்லியல் நிபுணர்கள் சேகரித்தி ருக்கின்றனர். தங்களுக்கு கிடைத்த புராதன பொரு ட்களைக் கொண்டு அவர்கள் ஆப்பிரிக்க மக்களின் வரலாறை தீர்மானிக்கின்றனர்.

நுபியா
ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் தோன்றிய முதல் நாகரிகம் நுபியர்களுடையது. எகிப்துக்கு சற்று தெற்கில், கி.மு. 3000ம் ஆண்டுவாக்கில், நைல் நதி நெடுகிலும் கிராமங்களை அமைத்து நுபியர்கள் வாழ்ந்தனர். வளமான மண் அமைப்பும், நைல் நதியின் அளவற்ற தண்ணீரும் அருமையான நகரை நிர்மாணிக்க சரியான இடமாக அமைந்தது. நுபியர்கள் அமைத்த அந்த நகரம், அந்தக் காலத்தில் மிகவும் நவீனமாக இருந்தது. நுபிய அரசர்களும், உயர்குடி மக்களும், வணிகர்களும் எகிப்து உள்ளிட்ட பிற தேசத்தவருடன் வர்த்த கம் செய்து சொத்துக்களை குவித்தனர்.

நுபிய அரசர்களின் கல்லறைகளைத் தோண்டிப் பார்க் கும் போது, அவர்கள், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த எகிப்து மன்னர்களைப் போலவே செல்வத்தில் சிறந்து இருந்திருப்பது தெரியவருகிறது.

கி.மு. 1500களில் குஷ் பிரதேசத்தை கைப்பற்ற எகிப்து தலை வர்கள் மிகப்பெரிய ராணுவத்தை அனுப்பினார்கள். குஷ் பிரதேசத்தை கைப்பற்றிய எகிப்து, அதை, அடுத்துவந்த 500 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது. குஷ் பிரதேசத்தை சேர்ந்த மன்னர்கள், எகிப்தின் பரூவா மன்னர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.

இருந்தாலும், கி.மு. 1000ம் ஆம் ஆண்டுவாக்கில் நிலைமை திரும்பியது. குஷ் அரசு எகிப்தி டமிருந்து விடுதலை பெற்றது. பிறகு, கி.மு. 724ல் பியான்கி என்ற குஷைட் மன்னர் நன்கு பயிற்சி பெற்ற மிகப்பெரிய குஷைட் ராணுவத்தைக் கொண்டு எகிப்து மீது படையெ டுத்தார். எகிப்தை வென்று அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

கி.மு. 671ல் மிக நவீன ஆயுதங்களை வைத்திருந்த அசிரிய இனத்தைவர்கள் குஷைட் இனத்தவரை எகிப்திலிருந்து விரட்டினர். பிறகு அதை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். குஷைட்டுகள் வெண்கல ஆயுதங்களை வைத்தி ருந்தனர். அசிரியர்கள் இரும்பு ஆயுதங்களை வைத்திருந்தனர். வெண்கலத்தைவிட இரும்பு உறுதியானது என்பதால் குஷைட்டுகள் போரில் தோற்க நேரிட்டது.

எகிப்தை விட்டு வெளியேறி தங்களுடைய குஷ் முடியாட் சிப் பகுதிக்குத் திரும்பியபிறகு குஷைட்டுகள் விரைவாக முன்னேறினர். குஷ் இனத்தவருக்கு அது பொற்காலமாக மாறியிருந்தது. அடுத்த 150 ஆண்டுகளுக்கு குஷைட்டுகள் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தனர். அவர்கள் மிகப்பெரிய வீடுகளைக்கட்டினர். அழகான நகரங்களைத் திட்டமிட்டு நிர்மாணித்தனர். ஆனால், கி.மு. 500 வாக்கில், கிழக்குப் பகுதியில் இருந்து வந்த ஆக்ஸம்கள் என்ற புதிய இனத்தவ ரிடம் குஷைட்டுகள் தோற்றனர். அவர்கள் குஷ் பிரதேசத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

ஆக்ஸம்
செங்கடலை ஒட்டிய பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள் ஆக்ஸம்கள். கடலை ஒட்டிய பகுதியில் இருந்ததால் அவர்களுடைய வர்த்தகம் செழித்தோங்கியது. ஆனால், குஷ் மன்னர்களை வெற்றி கொண்டதும், ஆப்பிரிக் காவின் பெரும் பகுதியில் அவர்களுடைய வர்த்தகம் விரிவ டைந்தது.

ரோம், இந்தியா, பெர்சியா, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து சரக்குக் கப்பல்கள் உணவு மற்றும் வாசனை திரவியங்களை கொண்டுவந்து குவித்தன. அதற்குப்பதிலாக தந்தங்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றிச் செல்லப் பட்டன.

கி.பி. 330ல் கப்பல் நொறுங்கியதால் கரையொதுங்கிய இருவர், ஆக்ஸம் மன்னரை கிறிஸ்துவராக மாற்றினர். இதை யடுத்து, தங்கள் நாட்டில் கிறிஸ்துவ மதத்தை அரசு மதமாக அறிவித்தார் மன்னர்.

கி.பி. 600 வரை ஆக்ஸம் கிறிஸ்துவ நாடாக இருந்தது. முஸ்லிம் படைகளும், கடல்கொள் ளையர்களும் ஆக்ஸம்களின் சொத்துக்களை சூறையாடினர். ஆக்ஸம் மிகச்சிறிய நாடு. அதற்கு யாரும் உதவிசெய்யவும் முன்வரவில்லை. செல்வாக்கில்லாத அந்த நாடு எதிரிகளை எதிர்த்து நிற்க வலுவின்றி தோற்றது. இப்போது அந்த நாடு எத்தியோப்பியா என்று அழைக்கப்படுகிறது.

நோக் மக்கள்
கி.மு. 700 வாக்கில் நைஜர் நதிச் சமவெளியில் ஒரு சிறிய நாகரிகம் தோன்றியது. இது நோக் மக்கள் நாகரிகம் என்று அழைக்கப்பட்டது. மிகச் சிலரே இந்த மக்களைப் பற்றியும் அவர்களுடைய கலாச்சாரம் குறித்தும் அறிந்திருந்தனர். இவர்கள் வடக்கில் இருந்த மன்னர்களைப் போல செல்வச் செழிப்புடன் இல்லை.

குடும்பங்களுடன் விவசாயம் செய்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்கள் வசித்த பகுதியில் கிடைத்த சில பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்தனர். உழுவதற்கு இவர்கள் இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

You may also like
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்
அடுக்கடுக்காய்… – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply