Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – சிந்து சமவெளி நாகரிகமும், சீன நாகரிகமும்

மனிதகுல வரலாறு – சிந்து சமவெளி நாகரிகமும், சீன நாகரிகமும்

சிந்து சமவெளி நாகரிகம்
ஒரு புதிய நாகரிகம் துவங்கியது. இது வரலாற்று நிபுணர்களால் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப் படுகிறது. ஹரப்பா நாகரிகம் 3 புறம் கடலாலும். 4வது புறம் மலைகளாலும் பாதுகாப்புடன் திகழ்ந்தது.

ஹரப்பா நாகரிகத்தைச் சார்ந்த மக்களைப் பற்றியும், அவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றியும் சிறிதளவே தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களது நாகரிகம் கி.மு.2500ல் துவங்கி கி.மு. 1500 வரை அதாவது ஆயிரம் ஆண்டுகாலம் நீடித்திருக்கலாம் என நம்பப் படுகிறது. இந்த நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததற்குப் பலரும் பல காரணங்களை கூறுகின்றனர்.

சிலர் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவைக் காரணமாக கூறுகின்றனர். சிலர் உள்நாட்டு போர் மற்றும் அந்நிய படையெடுப்பு போன்றவற்றால் ஹரப்பா நாகரிகம் அழிந்திருக்கக் கூடும் என நம்புகின்றனர்.

சீன நாகரிகம்
ஆசியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு நாகரிகம் இன்றளவும் தொடர்கிறது. இந்த நாகரிகம் சீன நாகரிகம் எனப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல், பிற நாடுகளில் இருந்து விலகி இருப்பதிலேயே இதன் வல்லமை அடங்கியுள்ளது.

கடல்கள், மலைகள், கோபி பாலை வனம் போன்ற இயற்கை அரண்கள் சீன நாகரிகம் பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அன்னிய ஊடுருவலில் இருந்து இவைதான் பாதுகாத்தன.

பிற தேசங்களுடன் சிறிய தொடர்புகளை மட்டுமே சீன நாகரிகம் ஏற்படுத்தி இருந்தது. உலகின் மையப் பகுதியில் உள்ளதால் தங்கள் நாகரிகம் மிக முக்கியமான, தலைசிறந்த ஒன்று என சீனர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

சீனப் பேரரசின் பூர்வீகம்
சீனப் பேரரசு எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் சிறிதளவே கிடைத்துள்ளன. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க மண்பாண்டங்களும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.

சொர்க்கத்தின் கட்டளை
சீனாவை முதன் முதலாக ஆண்ட பேரரசு ஷாங் தலைமையில் ஆனதாகும். ஷாங் அரசவம்சம் சீனாவை கி.மு.1700 முதல் கி,மு, 1000மாவது ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.

இந்தப் பேரரசு வு என்ற தனிநபரால் வீழ்த்தப் பட்டது. வு பிறகு ஜோ என்ற புதிய வம்சத்தை தோற்றுவித்துள்ளார். இந்த வம்சம் 800 ஆண்டுகாலம் ஆட்சி செய்தது.

சீன ஆட்சியாளர்கள் சொர்க்கத்திலிருந்து கட்டளை பெற்று தங்களை ஆட்சி செய்வதாக மக்கள் நம்பினர். எனினும் வேளாண்மையில் ஏற்பட்ட பின்னடைவு, போர்த் தோல்விகள் காரணமாக சொர்க்கத்தின் கட்டளை வீழ்ச்சி யடைந்து, புதிய அரச வம்சம் தோன்றியது.

இதன் பிறகு சீனாவை பல புதிய சக்திமிக்க வம்சங்கள் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆட்சி செய்தன.

மத்திய கிழக்கு நாகரிகம்
ஆரம்பகால வரலாறு தோன்றிய கால கட்டத்தில் பல நாகரிகங்களும் தோன்றின. எனினும், சிறு நாகரி கங்கள் கூட பெரிய நாகரிகங்களின் கவனத்தை ஈர்த்தன.

போக்குவரத்து வசதி தொலைதூர பயணிகள் புதிய பகுதிகளை அடைய பெரிதும் உதவியது. இவர்களால் தொழில் நுட்பமும், புதியயோசனைகளும், கலாச்சாரமும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எளிதில் பரவியது. வணிகப் போக்குவரத்துக்கு பயன்பட்ட வழிகளில் தோன்றிய நாகரிகம் மத்திய கிழக்கு நாகரிகம் என்று அழைக்கப்பட்டது.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply