Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்

மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்

பாண்டு மக்கள்
கி.மு. 1100 வாக்கில் ஆப்பிரிக்கா முழுவதும், நாகரிக வளர்ச்சியற்ற மக்கள் வாழ்ந்த கிராமங்களால் நிறைந்திருந்தது. இவர்கள் பேசிய மொழி ஒருவருக்கொருவர் புரியும் வகையில் இருந்தது. இவர்களுடைய மொழி பாண்டு என்று அழைக்கப் பட்டது. எனவே, இவர்களும் பாண்டு மக்கள் என்று அழைக் கப்பட்டனர்.

சிறிய கிராமங்களில் பாண்டு மக்கள் வாழ்ந்தனர். இந்தக் கிராம ங்களுக்கு ஒரு தலைவர் இருப்பார். அல்லது குழு இருக்கும். அல்லது, முதியோர் தலைமையில் நிர்வகிக்கப் படும். இந்தக் கிராமங்களில் வசித்த மக்கள் தனித்தன்மையை பாதுகாத்த னர். ஆனால், வேறுபட்ட கிராமங் களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதும் பொதுவான நடைமுறை யாக இருந்தது.

பாண்டு மக்களின் கிராமங்கள் அமையும் இடம் தற்காலிகமானதாக இருந்தது. ஒரு பகுதியில் அவர்களுக்கு தேவையான வளங்கள் இருக்கும் வரைதான் அவர்கள் அங்கு கிராமம் அமைத்து குடியிருப்பார் கள். வளங்கள் தீர்ந்ததும், வேறொரு வளமிக்க பகுதியில் புதிய கிராமம் அமைத்து குடியேறி விடுவார்கள்.

கானா முடியரசு
கி.பி. 300களில் மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய சக்தி வாய்ந்த முடியரசு உருவாகியது. இதற்கு கானா முடியரசு என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. கி.பி. 300 முதல் கி.பி.1200 வரை உப்பு, தங்கம் ஆகியவற்றின் ஏற்றுமதியை இந்த முடியரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தங்கள் பகுதியைக் கடந்து சரக்கு ஏற்றிச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு கானா நிர்வாகம் வரி வசூலித்தது. இந்தக் கப்பல்கள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு சரக்கு களை ஏற்றிச் சென்றன.

கானாவின் பரப்பளவு ஒரு லட்சம் சதுர மைல்களாக இருந்தது. எகிப்தின் அரசர் பரூவா என்று அழைக்கப்பட் டதைப் போல, கானா முடியரசின் அரசர் கானா என்று அழைக்கப்பட்டார்.

மாலி முடியரசு
கானா முடியரசின் கீழ் இருந்த குட்டி நாடு ஒன்று, கி.பி. 1200களில் விடுதலை பெற்றது. அந்த குட்டி நாட்டின் பெயர் மாலி. கி.பி. 1300களில் மாலி தனது பிரதேசத்தையும் செல்வாக் கையும் விரிவாக்கியது. கி.பி. 1300களின் இறுதியில், முன்பு தன்னை அடக்கியாண்ட கானா முடியரசையும் அதைச் சுற்றியிருந்த பிரதேசத்தையும் மாலி முடியரசு தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்தது.

இந்த புதிய முடியரசு, தனது பக்கத்து நாடுகளிடம் இருந் தும், அது வெற்றிகொண்ட நாடுகளில் இருந்தும் எதிர்ப்பை சம்பாதித்தது. கி.பி. 1500களில் மாலி முடியரசு வெற்றிகொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் மாலி முடியரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். அதேசமயத்தில் வெளி நாடுகளில் இருந்து மாலி மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. இவை மாலி ராணுவத்தின் பலத்தை சிதைத்தது. இதையடுத்து மாலி முடியரசு சிறு சிறு நாடுகளாக சிதறியது.

சோங்காய் முடியரசு
கி.பி. 1400களில் சன்னி அலி என்பவர் தலைமையில், வலிமை மிகுந்த ராணுவம் அடுத்தடுத்த வெற்றிகளை ஈட்டியது. இந்த வெற்றிகளின் விளைவாக, முன்னாள் முடியரசுகளான கானா, மாலி ஆகியவற்றின் பெரும்பகுதியை கைப்பற்றினார். சன்னி அலி இறந்த பிறகு அவருடைய மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சன்னி அலி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். அவருடைய மகன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இல்லை. முஸ்லிம் அல்லாத தங்கள் மன்னருக்கு எதிராக மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். அவருக்குப் பதிலாக அஸ்கியா முகமது என்பவரை மன்னராக நியமித்தனர்.

கி.பி. 1528களில் முகமதுவை அவருடைய மகன் தூக்கி யெறிந்தார். இதையடுத்து சோங்காய் முடியரசில் போர்கள் வெடித்தன. முடியரசின் செல்வாக்கு சிதைந்தது. இந்தப் போர்கள் முடியரசை நலிவடையச் செய்தது. எனவே, கி.பி. 1589ல் மொராக்கோவிலிருந்து படையெடுத்து வந்த ராணு வத்தை எதிர்கொள்ள முடியாமல் சோங்காய் பேரரசு வீழ்ச்சி யடைந்தது.

(மனிதகுல வரலாறு முதல்பகுதி முடிந்தது)

You may also like
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்
அடுக்கடுக்காய்… – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply