Home > அறிவியல் > மனிதகுல வரலாறு – பரிணாமத்தின் அடுத்தக் கட்டம்

மனிதகுல வரலாறு – பரிணாமத்தின் அடுத்தக் கட்டம்

ஹோமோ சாபியன்ஸ்

மனித இனம் தோன்றி லட்சக் கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சிக்கு பிறகு ஹோமா சாபியன்ஸ் இனம் உருவானது.

ஹோமோனிட்ஸ் என்று அழைக்கப்பட்ட குரங்கு மனித இனத்தின் எழுச்சி மிக மெதுவாகத்தான் இருந்தது.  புதிய திறனை கற்க அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது.

ஆனால், ஹோமோ சாபியன்ஸ் இனத்தவர் வந்தவுடன் எல்லாம் மாறியது. இவர்கள் அனைத்து விஷயங்களிலும் விரைவாக  முன்னேறினர்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றத்தைக் கூட இவர்கள் நூறாண்டு அல்லது பத்தாண்டு கால அவகாசத்தில் சாதிக்கக் கூடியவர் களாக இருந்தனர். அந்த அளவுக்கு இவர்களுடைய மூளைத் திறன் வளர்ச்சி அடைந்திருந்தது.

நியாண்டர்தல் மனிதர்கள்

முதல் சிந்திக்கச் தெரிந்த ஹோமோ சாபியன்ஸ் இனமாக நியாண்டர்தல் மனித இனம் கருதப்படுகிறது.

இந்த இனத்தவர் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றியதாக நம்பப்படு கிறது.

இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் உலகின் பல பகுதிகளுக்கு பரவி னர்.

ஜெர்மனியில் உள்ள நியாண்டர்தல் பகுதியில் குழுக் களாக வாழ்ந்த மனிதர்கள் ஐந்து முதல் 6 அடி உயரம் வரை  இருந்தனர்.  இவர்களுக்கு எலும்புகள், தோள்கள், கால்கள், கைகள், கழுத்து போன்றவை வலுவாக இருந்தன. நவீன மனித இனத்தைவிட இவர்களுக்கு மூளை அளவு பெரிதாக இருந்தது.

நியாண்டர்தல் மனிதர்களின் கருவிகள்

தொடக்க கால மனித இனத்தவர் போலவே, நியாண் டர்தல் இனத்தவரும் கருவிகளை உபயோகிக்கத் துவங்கினர்.

எனினும், நியாண்டர்தல் இனத்தவர் உருவாக்கிய கருவி கள் அவர்களின் முந்தைய தலைமுறையினர் உருவாக்கியதை விட சிறப்பாக இருந்தன.

பாறைகளின் ஓரங்களை உடைத்து, அதை தேவையான அளவுக்கு நறுக்கினர். அப்படி நறுக்கப்பட்ட கல் துண்டுகளை கூர் தீட்டவும், கூர் தீட்டப்பட்ட ஆயுதங்களை குறிப்பிட்ட வேலைகளுக்கு பயன்படுத்தவும் தெரிந்திருந்தனர். மென்மை யான மற்றும் கடினமான கற்களை பயன்படுத்தி தங்களுடைய ஆயுதங்களை தயாரித்தனர். பல்வேறு கற்களை பயன்படுத்தி ஒரேவிதமான ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர்.

நியாண்டர்தல் இனத்தின் உறைவிடம்

நியாண்டர்தல் இனத்தவர் பலதரப்பட்ட சூழ்நிலைகளி லும் வாழத் தெரிந்தவர்கள்.  இவர்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருந்ததால் புதிய சூழ்நிலைகளுக்கு எளிதில் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடிந்தது.  இவர்களில் சிலர் குகைகளிலும், பிறர் மரங்களிலும் வாழ்ந்தனர்.

மிருகங்களின் தோலை உபயோகித்தும் கூடாரங்கள் அமைத்து வாழ்ந்தனர்.  இவர்களில் சிலர் மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றால் தடுப்புகளை உருவாக்கி, உறைவி டங்களை ஏற்படுத்தினர்.

நியாண்டர்தல் கலாச்சாரம்

நியாண்டர்தல் இனத்தவர் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இதன்காரணமாக அவர்களது கலாச்சாரம் வாழ்ந்த இடங்களுக்குத் தக்கபடி வேறுபட்டு இருந்தது.  தொல்லியல் நிபுணர்கள் மற்றும் வரலாற்று நிபுணர்கள் நியாண்டர்தல் இனத்தவர் குறித்து கூறும் தகவல்களில் ஓரளவு ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

நியாண்டர்தல் இனத்தவர் மரணத்துக்குப் பின் வாழ்க்கை உண்டு என்பதை நம்பினர்.  இறந்த உடல்களை மலர்களால் மூடி புதைத்தனர். இறந்தவருடைய அடுத்த பிறவிக்கு உதவும் என்று அவருக்குத் தேவையான ஆயுதங்களுடன் புதைத்தனர். நியாண்டர்தல் இனத்தவர் நோய்வாய்பட்டால் சிகிச்சை எடுத்ததற்கும், தங்கள் ஆரோக்யத்தின் மீது அக்கறை எடுத்துக் கொண்டதற்கும் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  இவர்கள் எலும்பு முறிந்த காலைக் கூட குணப்படுத்தினர். தவிர நியாண்டர்தல் இனத்தவர்கள் மருந்துகளையும் உபயோகப்படுத்தி உள்ளனர்.

ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ்

நம்மைப் போன்ற மனிதர்கள் இந்த பூமியில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகினர். இவர்களும் ஆப்பிரிக் காவில்தான் முதன் முதலில் உருவானதாக கருதப்படுகிறது.

இந்த நவீன மனித இனம் வரலாற்று நிபுணர்களால் ஹோமோ சாபியன்ஸ் சாபியன்ஸ் (பிஷீனீஷீ ஷிணீஜீவீமீஸீs ஷிணீஜீவீமீஸீs) என அழைக்கப்படுகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு உள்ளாகவே இந்த நவீன மனித இனம் உலகம் முழுவதிலும், தீவுப் பகுதிகள் உட்பட பரந்து வியாபித்தனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய இவர்கள், நியான்டர்தல் மனித இனத்தை குறிவைத்து அழித்தனர். அவர்களுடன் சண்டையிட்டும், அவர்களுடன் கலப்பு திருமணம் செய்தும் அந்த இனத்தை முற்றாக ஒழித்திருக்க லாம் என நம்பப்படுகிறது.

You may also like
அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!
பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply