Home > அறிவியல் > ஐபோன்-12 அறிமுகம்

ஐபோன்-12 அறிமுகம்

ஐபோன் 12

ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் என 4 மாடல்களில் இந்த புதிய போன் அறிமுகமாகி உள்ளது. இதில் விலை குறைவான சிறிய ரக போனாக ஐபோன் 12 மினி அறிமுகமாகி உள்ளது.

இந்த நான்கு மாடல் போன்களும் இரண்டு சிம்கார்டு வசதி, ஆப்பிளின் ஐஒஎஸ் 14 இயங்குதளம், சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஒஎல்இடி திரை, செரமிக் கிளாஸ் ஷீல்ட் திரை கவர், 4கே வீடியோக்களை எடிட் செய்யும் ஏ14 பயோனிக் எஸ்ஒசி சிப் கொண்ட போன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 12 மினியானது, 5.4 இன்ச் திரை கொண்டதாகவும், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 புரோ ஆகிய இரண்டு போன்களின் திரையும் 6.1 இன்ச் திரையும், ஐபோன் 12 புரோ மேக்ஸ் போன்களின் திரை, 6.7 இன்ச் கொண்டதாகவும், அனைத்து போன்களும் 5 ஜி தொழில்நுட்பம் கொண்டதாகவும் அறிமுகமாகி உள்ளது.

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ஆகிய போன்களின் பின்புறத்தில் இரண்டு 12 மெகா பிக்சல் கேமராக்களுடன் வெளிவந்துள்ளது.

அதே சமயம், ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகிய போன்களின் பின்புறத்தில் மூன்று 12 மெகா பிக்சல் கேமராக்கள் உள்ளன.

இதனிடையே நான்கு போன்களின் முன்புறத்திலும் 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங்

இந்த போன்கள் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டது என தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 12 உடன் சார்ஜர் கொடுக்காமல் யுஎஸ்பி – சி கேபிள் மட்டுமே கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சார்ஜிங் அடாப்டரை அது தராமல் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விலை

விலையை பொறுத்தவரை, இந்தியாவில், ஐபோன் 12 மினியின் விலை 69,900 ரூபாய்க்கும், (64 ஜிபி மாடல்), ஐபோன்-12 விலை 79,900 ரூபாய்க்கும் (64 ஜிபி மாடல்), ஐபோன் 12 புரோ, 1 லட்சத்து 19,900 ரூபாய்க்கும் ( 128 ஜிபி மாடல்),

ஐபோன் 12 புரோ மேக்ஸ் ( 128 ஜிபி மாடல் ) 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் அறிமுகமாகி உள்ளது. அதிகபட்சமாக ஐபோன் 12 புரோ மேக்ஸ் போனின் 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like
ஆல்வேஸ் மியூட் வாட்ஸ்அப்
நவ. 3-ம் தேதி ”இன்” போன்கள் – அறிமுப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ்”

Leave a Reply