Home > அறிவியல் > பதஞ்சலி – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 4

பதஞ்சலி – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 4

உபநிஷத்துகளிலும் அதர்வன வேதத்திலும் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும், கி.மு. 2 ஆம் நூற்றாண்டில்தான் அதன் அடிப்படைகளையும் பயிற்சி முறைகளையும் போதுமான அளவுக்கு தெளிவுபடுத்தினார்கள். இதைச் செய்தவர் பதஞ்சலி முனிவர். இவர் எழுதிய யோக சூத்திரா என்ற நூலில்தான் யோகா குறித்து மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் நதி எனப்படும் வாய்க்கால்களும், சக்கரம் எனப்படும் மைப்பகுதியும் உள்ளன. இவற்றை மெல்லத் தட்டி எழுப்பினால் நமது உடலில் மறைந்துள்ள குண்டலினி எனப்படும் மிகப்பெரிய சக்தி வெளிப்படும். அதையடுத்து நமது உடல் தெய்வீக சக்தியைப் பெறும்.

இதற்கு பதஞ்சலி எட்டு நிலைகளை வகுத்தார்.

யாமா, நியமா, ஆஸனா, பிரணாயாமா, பிரத்யஹாரா, தாரனா, தியானா, சமாதி என்று இந்த எட்டு நிலைகளை முறைப்படி எட்டினால் நமக்குள் கடவுளைக் காணலாம் என்கிறார் அவர்.

யோகா மூலம் கடவுள் நிலையை அடைவது எப்படி என்பதற்கு அவர் எளிமையான விளக்கத்தை அளித்தார்.
நமது மனம் என்பது குளத்து நீரின் மேற்பரப்பு போன்றது.

மேற்பரப்பில் அலை அடிக்கும்போது தரையில் கிடக்கும் நகையை பார்க்க முடியாது. அதுபோலத்தான் மனம் அலைபாயும்போது, தெய்வீகத் தன்மையை உணரமுடியாது.

குளத்தின் மேற்பரப்பு அலையில்லாம் தெளிவாக இருக்கும்போது தரையில் மின்னும் நகையை பார்க்க முடியும். அதுபோலத்தான், வெளியுலகின் இடையூறுகள் இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும்போது தனக்குள் ஒருவர் கடவுளை உணர முடியும்.

கடந்த சில பத்தாண்டுகளில்தான் யோகாவின் சக்தியை அறிவியலாளர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
யோகா மூலமாக மனம் மற்றும் உடல்ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று சோதனைகள் நடத்தி நிரூபித்திருக்கிறார்கள்.

யோகிகளிடம் சோதனை நடத்தி அவர்களுக்கு அதீத சக்தி இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அவர்களால் ஆக்ஸிஜனோ, உணவோ இல்லாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதை அறிந்து வியப்படைந்தனர்.
யோகா மூலம் இன்னும் என்னென்ன செய்ய முடியும் என்பதை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் பரிந்துரை செய்த யோகாவை இப்போது உலகம் கொண்டாடத் தொடங்கி இருக்கிறது.

You may also like
நேபாள வரலாறு 1 – வானத்தைச் சந்திக்கும் பூமி – ஆதனூர் சோழன்
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration

Leave a Reply