Home > அறிவியல் > விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ள விவோ, வரும் நவம்பர் 11ம் தேதி எஸ்7இ என்ற புதிய 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் விலை குறித்து அறிவிக்காத விவோ நிறுவனம், அதன் சிறப்பம்சங்கள் குறித்து மட்டும் தற்போதைக்கு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் கொண்டது என்றும் பின்புறத்தில் 64 மெகா பிக்சல் பிரதான கேமராவுடன், மொத்தம் நான்கு கேமராக்களும், முன்புறத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜரை கொண்டு துரிதமாக சார்ஜ் ஏற்றும் வகையில் 4100 எம்ஏஎச் பேட்டரியை அது கொண்டிருக்கும் என்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியுடன் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய போன் ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளத்தில் இயங்கும் என்றும் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமொலெட் திரையை கொண்டிருக்கும் என்றும் விவோ தெரிவித்துள்ளது.

மேலும், திரையிலேயே விரல் ரேகை பதிவிடும் சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட், புளூடூத், 3.5 எம்எம் ஜாக், என ஏராளமான சிறப்பம்சங்களுடன் வரும் 11ம்தேதி சீனாவில் இந்த போனை விவோ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அப்போது தான் இந்த போனின் விலை மற்றும் இந்தியா உள்ளிட்ட சந்தைகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல் தெரியவரும்.

You may also like
செல்போன் பயன்படுத்தாமல் எங்கள் கடையில் சாப்பிட்டால் பீட்சா இலவசமாக வழங்குவோம்.

Leave a Reply