Home > அறிவியல் > SLED டிவி – ரியல்மி அறிமுகம் !

SLED டிவி – ரியல்மி அறிமுகம் !

SLED எனப்படும் புதிய திரை தொழில்நுட்பம்

உலகிலேயே முதல்முறையாக SLED எனப்படும் புதிய திரை தொழில்நுட்பம் கொண்ட டிவியை ரியல்மி அறிமுகப்படுத்தி உள்ளது.

சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் எல்இடி டிவிக்கள், விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

சிலபிரிமீயம் ரகங்களான கியூ எல்இடி மற்றும் ஒஎல்இடி டிவிக்களையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இதற்கு முன் எந்த ஒரு நிறுவனமும் அறிமுகப்படுத்தாத. SLED எனப்படும் ஒரு புதிய திரை தொழில்நுட்பத்திலான டிவிக்களை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி 55 இன்ச் அளவில் இந்த எஸ்எல்இடி 4கே டிவியை 42 ஆயிரத்து 990 என்ற விலைக்கு ரியல்மி அறிமுகப்படுத்தி உள்ளது.

அறிமுக சலுகையாக 39 ஆயிரத்து 999 என்ற விலைக்கு இந்த டிவியை விற்பனை செய்ய உள்ளதாகவும் ரியல்மி தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் வரும் 16ம் தேதி முதல் முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிராய்ட் 9.0 இயங்குதளம், 16 ஜிபி மெமரி, 3 எச்டிஎம்ஐ போர்டுகள், இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகள், ஈத்தர்நெட் போர்ட், புளூடூத் 5.0, இன்பிராரெட், டூயல்பேண்ட் ஃவைபை, என சகல வசதிகளுடன் வந்திருக்கும் இந்த டிவியின் ரிமோட்டில், அமேசான் பிரைம், யுடியூப் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுக்கென தனித்தனியாக பட்டன்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த டிவியின் முக்கிய சிறப்பாக கருதப்படும் திரை தொழில்நுட்பம் குறித்தும் நிறுவனம் விளக்கம் கொடுத்திருக்கிறது. அதாவது, எல்இடிவி உள்ளிட்ட எந்த ஒரு டிஜிட்டல் திரையில் இருந்தும், கண்ணுக்கு புலப்படாத ஒரு நீல நிற ஒளி வெளிவருகிறது.

இது அதிகம் படும்போது விழித்திரையை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நீல நிற ஒளியை மிக குறைந்த அளவில் வெளியேற்றும் தொழில்நுட்பத்தை தான் இந்த எஸ்எல்இடி திரைகள் கொண்டிருப்பதாகவும், அதே சமயம் கியுஎல்இடி டிவிக்களை விட அதிக கலர் மற்றும் கான்டிராஸ்ட் கொண்ட டிவிக்களாக இவை இருக்கும் என ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply