Home > அறிவியல் > சத்தம் போட்டு பேசினால் கொரோனா பரவுமா? விஞ்ஞானிகள் கூறும் தகவல்கள்

சத்தம் போட்டு பேசினால் கொரோனா பரவுமா? விஞ்ஞானிகள் கூறும் தகவல்கள்

அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், மக்களை பேச வைத்து சோதனை செய்தனர். அதில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கொரோனா வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் போது, ஒரு சில நபர்கள் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்துகொண்டிருப்பதையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
You may also like
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மேலும் 1,534 பேருக்கு கொரோனா
இந்தியாவில் 12.07 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை’ -ஐ.சி.எம்.ஆர். தகவல்
நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி

Leave a Reply