Home > அறிவியல் > பூமியின் வரைபடம் மாறிய கதை

பூமியின் வரைபடம் மாறிய கதை

பூமியின் வரைபடம் மாறிய கதை

பூமியின் வரைபடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மாறியது என்பதை அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.

துவக்க கால பூமி, இடைக்கால பூமி, சமீபத்திய பூமி என்று மூன்று காலகட்டங்களாக பிரித்துப் பார்க்கலாம்.

பூமியின் இடைக்காலத்தை மீஸோஜோயிக் (ஆநளடிணடிiஉ) என்று அழைக்கிறார்கள்.

பதினெட்டரை கோடி ஆண்டுகளில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகள் வரை இந்த காலகட்டத்தை பிரிக்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் பூமியின் நிலப்பகுதி இரண்டு மிகப்பெரிய ‘சூப்பர்’ கண்டங்களாக பிரிந்து கிடந்தன. தெற்கேயிருந்த நிலப்பகுதி கோண்ட்வானா கண்டம் என அழைக்கப்பட்டது. வடக்கேயிருந்த நிலப்பகுதி வாரசியா கண்டம் என அழைக்கப்பட்டது.

இந்த இரண்டு கண்டங்களையும் டெதிஸ் என அழைக்கப்பட்ட கடல் பிரித்தது.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏதோ ஒரு மிகப்பெரிய பிரளயம் நிகழ்ந்தது.

இதையடுத்து தெற்கேயிருந்த கோண்டுவானா கண்டம் பிளந்து நிலப்பகுதிகள் வடக்கு நோக்கி நகரத் தவங்கின.

தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை இப்படி நகர்ந்து உருவாகியவைதான்.

இந்த மாபெரும் மாற்றத்தின் விளைவாக பூமியின் விலங்குகள் மற்றும் தாவரங்களும் மாறின.

பாலியோசீன் சகாப்தம்

ஆறரைக் கோடி ஆண்டுகளில் இருந்து 5 கோடியே 65 லட்சம் ஆண்டுகள் வரையான காலத்தை பாலியோசீன் (ஞயடயநடி உநநே) சகாப்தம் என அழைக்கின்றனர்.

இந்த சகாப்தத்தின் போது, கிரேடாசியஸ் எனப்படும் மிகப் பரந்த உள் நிலக்கடல்கள் வறண்டன. இதன் விளைவாக வட அமெரிக்கா மற்றும் யுரேசியாவில் மிகப்பெரிய நிலப்பகுதிகள் வெளிப்பட்டன.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் இந்த வரைபடத்தில் இந்தியா எங்கே இருக்கிறது, ஆஸ்திரேலியா எங்கே இருக்கிறது என்று தெரிகிறதா?

இயோசீன்

5 கோடியே  65 லட்சம் ஆண்டுகளில் இருந்து 3 கோடியே 54 லட்சம் ஆண்டுகள் வரையிலான காலத்தை இயோசீன் (நுடிஉநநே) என்கிறார்கள்.

இயோசீன்

தெற்கேயிருந்த கோண்ட் வானா நிலப் பகுதி இந்த கால கட்டத்திலும் தொடர்ந்து பிளந்து கொண்டுதான் இருந்தது.

அதே சமயம், வடக்கேயிருந்த லாரசியா (டுயரசயளயை) கண்டமும் பிளக்க துவங்கியது.

இந்த காலகட்டத்தில் இன்றைய வடஅமெரிக்காவும், ஆசியாவும் தொட்டு தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. ஐரோப்பா எங்கே இருக்கிறது, சவூதி அரேபியா எங்கே இருக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. கிரீன்லாந்தும், இங்கிலாந்தும் ஒட்டிக்கிடக்கின்றன.

வரைபடத்தைப் பார்த்தால் இந்த வேடிக்கை வினோதம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

இந்த வரைபடங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்அமெரிக்காவை நீங்கள் யூகித்து விடுவீர்கள்.

ஓலிகோசீன்

3 கோடியே 54 லட்சம் ஆண்டுகளில் இருந்து 2 கோடியே 33 லட்சம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தை ஓலிகோ சீன் (டீடபைடிஉநநே) என்கி றார்கள்.

பூமியின் உஷ்ண நிலை பொதுவாக மிதமாகியது. அண்டார்டிகா பகுதியில் பனி உறை நிலை துவங் கியது.

ஓலிகோசீன்

ஆப்பிரிக்கா கண்டம் ஆசியாவை நெருங்கி விட்டது. ஆசியாவுடன் வட அமெரிக்கக் கண்டம் ஒட்டியே இருந்தது. கிரீன் லாந்திலிருந்து பிரிந்த நிலப்பகுதி ஆசியா கண்டத்துடன் ஒட்டியது.

இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி ஆசியாவுடன் மோதிவிட்டது. இந்த மோதலின் விளைவாகத்தான் இமயமலைத் தொடர் மேலே எழும்பியது.

மியோசீன்

2 கோடியே 33 லட்சம் ஆண்டுகளில் இருந்து 52 லட்சம் ஆண்டுகள் வரையி லான காலத்தை மியோ சீன் (ஆiடிஉநநே) என்று அழைக்கி றார்கள்.

மியோசீன்

இந்த கால கட்டத் தில் ஆசியாவும், வட அமெரிக்காவும் உறவை அறுத்துக் கொண்டன. கிரீன்லாந்தும் தனியாக போய்விட்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் கோணல்மாணலான நிலப்பகுதிகள் இணைந்தன.

ஆப்பிரிக்கா ஆசியாவுடன் இணைய சமயம் பார்த்தது. இங்கிலாந்து ஆசியாவுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. இந்தோனேசியா எதிலிருந்து பிரியப் போகிறது என்பது புலப்படவில்லை. ஜப்பானை காணவே முடியவில்லை. பூமியின் தட்பவெப்ப நிலை வெதுவெதுப்பாகியது.

ப்ளியோசீன்

52 லட்சம் ஆண்டுகளில் இருந்து 18 லட்சம் ஆண்டுகள் வரையான காலகட்டத்தை ப்ளியோசீன் (ஞடடடிஉநநே) என்கிறார்கள்.

கண்டங்கள் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருந்தன. இந்தியாவை ஒட்டி இலங்கை உருவாகியது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு முழு உலகையும் மாற்றி விட்டது.

இந்த வரைபடங்களில் இந்தோனேசியாவையும், இங்கிலாந்தையும், ஜப்பானையும் அனுமானிக்க முடிகிறதா பாருங்கள்.

பிளெய்ஸ்டோசீன்

18 லட்சம் ஆண்டுகளிலிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலம்  பிளெய்ஸ்டோசீன் என அழைக்கப் படுகிறது.

இந்தக் கால கட்டத்தில் பூமியின் நிலப்பகுதிகள் கிட்டத்தட்ட இப்போதுள்ளது போல இணைந்து விட்டன.

இதை ‘மாபெரும் பனிக்கட்டி காலம்’ என்கிறார்கள். தனித்தனியாக 5 காலகட்டங்களில் பனி உறைவதும், பனி உருகுவதுமாக பருவ மாறுதல்கள் நிகழ்ந்தன.

உச்சகட்டமாக பூமியின் 30 சதவீத நிலப்பகுதி பனியால் மூடப்பட்டது. வடக்கேயிருந்த கடலின் ஒரு பகுதி உறைந்துவிட்டது.

பூமியின் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பெரிய அளவில் மாற்றம் பெற்றன.

You may also like
உயிர்கள் வாழும் அழகிய பூமி
வெள்ளியை ஆராயும் விண்கலம்!
அழகிய வெள்ளியின் அபாயம்
‘பெர்சவரன்ஸ்’ விண் ஊர்தி நேற்று தனது பயணத்தை தொடங்கியது.

Leave a Reply