Home > அறிவியல் > வெள்ளியை ஆராயும் விண்கலம்!

வெள்ளியை ஆராயும் விண்கலம்!

ரோமானிய அழகு தேவதை வீனசின் பெயரால் அழைக்கப்படும் வெள்ளி கோள்.

அழகான ஆனால் ஆபத்தான இந்த கோளை ஆராய 16 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஐரோப்பா விண்கலத்தை அனுப்பியுள்ளது.

வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற இந்த விண்கலம் 163 நாள் பயணத்தை முடித்து 2006 ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெள்ளியை சுற்றத் துவங்கியது.

வீனஸ் எக்ஸ்பிரஸ்

2006 ஜூன் 4ம் தேதி முதல் தனது ஆய்வை துவங்கியது. சோவியத் ரஷ்யாவின் வெனரா.7 என்ற விண்கலம்தான் முதன்முதல் வெள்ளியில் தரையிறங்கியது. திணறச் செய்யும் அழுத்தம் தகிக்கும் அனலில் அது 20 நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது.

இது வெள்ளியின் தரை மட்டத்திலிருந்து 250 கிலோ மீட்டர் தாழ்வாகவும், 66 ஆயிரம் கிலோ மீட்டர் அதிகபட்ச உயரத்திலும் சுற்றுகிறது.

பூமியின் எதிர்காலம் உஷ்ணமயமாகி விடும். அப்படிப்பட்ட சூழலை புரிந்து கொள்வதற்கு இந்தப் பயணம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இரண்டு ஆண்டுகள் இது வெள்ளியை சுற்றும். 1961 மற்றும் 1989 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் 30க்கும் அதிகமான விண்கலங்களை அனுப்பின. அவற்றில் சில வெள்ளி கோளை அடைந்தன. மற்றவை காணாமல் போயின.

1962ல் அமெரிக்க விண்கலமான அமெரிக்கன் மெரைனர் 2 முதல் முறையாக வெள்ளி கோளை சுற்றியது. அங்கு உயர் அழுத்தம் நிலவுவதை அதுதான் உறுதி செய்தது.

சோவியத் ரஷ்யாவின் வெனரா 7 என்ற விண்கலம் தான் முதன் முதலில் வெள்ளியில் தரையிறங்கியது. திணறச் செய்யும் அழுத்தம் தகிக்கும் அனலில் அது 20 நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது.

அதைத் தொடர்ந்து வெனெரா 9 விண்கலம் வெள்ளியில் தரையிறங்கி அதன் தரைப்பகுதியை படம் பிடித்து அனுப்பியது.

அமெரிக்காவின் நாஸா அனுப்பிய மெகல்லன் விண்கலம் நாள் ஒன்றுக்கு 8 முறை வீதம் 1990 முதல் 1994ம் ஆண்டு வரை சுற்றியது. அது அனுப்பிய வெள்ளி கோளின் படங்களில் அங்கு பதவிக் கிடந்த எரிமலைகள் புலப்பட்டன.

2006 ஏப்ரல் 12ம் தேதி வீனஸ் எக்ஸ்பிரஸ் எடுத்தனுப்பிய இரண்டு படங்கள் வெள்ளியின் வினோத தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

You may also like
பூமியின் வரைபடம் மாறிய கதை
பூமியின் வரைபடம் மாறிய கதை
உயிர்கள் வாழும் அழகிய பூமி
அழகிய வெள்ளியின் அபாயம்
கோள்கள் எட்டு

Leave a Reply