மற்ற விலங்குகளை விட பூச்சிகள்தான் வெகு காலத்திற்கு முன்பே பறக்கும் ஆற்றலைப் பெற்றன.
கடலுக்கு அடியில் வாழ்ந்த புழுக்களில் இருந்து இந்த பூச்சிகள் உருவாகி இருக்கலாம். சில பூச்சிகள் பிரமாண்டமானவையாக இருந்தன.
3 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் மிகப்பெரிய தட்டாம்பூச்சி வகையைச் சேர்ந்த மகநியூரா அத்தகைய பூச்சிகளில் ஒன்று.
இதன் இறகு நீளம் 60 சென்டிமீட்டருக்கு மேல் இருந்ததாக கருதப்படுகிறது.