Home > அறிவியல் > டைனோசர்கள் நீளமான பெயர்களைப் பெற்றிருப்பது ஏன்?

டைனோசர்கள் நீளமான பெயர்களைப் பெற்றிருப்பது ஏன்?

டைனோசர்களின் பெயர்கள், நம்மை குழப்பும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், அந்தப் பெயர்கள் அதற்கு சொந்தமான டைனோசரின் சிறப்பு அம்சத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தப் பெயர்கள், கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளி லிருந்து உருவாகியவை. டைனோசர் என்றால் கொடூரமான பல்லி என்று பொருள். கோரிதொசாரஸ் என்றால் தலைப்பாகையுடைய ஊர்வன என்று அர்த்தம். டிரைசெராடாப்ஸ் என்பதற்கு மூன்று கொம்புகளைக் கொண்ட முகம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆர்னிதோமிமஸ் என்பது பறவைகளை ஒத்திருப்பது என்பதாகும். பச்சிசெல்பாலோசைரிஸ் என்பதற்கு வலுவான தலை கொண்ட ஊர்வன என்று அர்த்தம்.

You may also like
படிமம் என்பது என்ன?
ஆதி மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது?

Leave a Reply