Home > அறிவியல் > மழை பெய்வது ஏன்?

மழை பெய்வது ஏன்?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்

மழை மேகங்கள் எனப்படும் மேகங்கள் உருவாவதால் மழை பெய்கிறது. இந்த மேகங்கள், பூமியிலிருந்து மிகக்குறைந்த உயரத்தில் உருவாகின்றன.

இந்த மாதிரியான மேகங்கள் நம் கண்ணில் தட்டுப்பட்டால் விரைவில் மழை பெய்யும் என்பதை உறுதிப்படுத்திவிட முடியும்.

மழை மேகத்தின் உள்ளே என்ன இருக்கும்?

நீர்த்துளிகள் மற்றும் ஐஸ் கட்டிகளால், மழை மேகங்கள் உருவாகின்றன. இந்த நீர்த்துளிகள் போதிய அளவில் சேரும்போது, கனம் தாங்காமல் பூமியை நோக்கி இறங்குகின்றன.

தம்முடன்  அதிக அளவில் நீரை உள்ளடக்கி வரும் மேகத்தின் மீது குளிர் காற்று பட்டவுடன் மழைத்துளிகளாக விழுகின்றன.

மேகத்தில் இருக்கும் பெரிய அளவிலான பனிக்கட்டிகள் சிதறி, உருகி மழைத் துளிகளாக மண்ணில் விழுகின்றன.

மழைநீர் எங்கே செல்கிறது?

நிலத்தில் விழும் மழை நீர் தாழ்ந்த பகுதிகளை நோக்கி ஓடுகிறது. குழிகள், சாக்கடைகள் வழியாக நீர் ஓடுகிறது. ஒரு பகுதியை நிலம் உறிஞ்சுகிறது.

இந்த நீரைத்தான் மரங்கள் மற்றும் தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. இன்னொரு பகுதி, நிலத்திலேயே சேறாகவும், சகதியாகவும் தேங்குகின்றன.

குளங்களில் தேங்கும் நீரில் பெரும்பகுதியை நிலம் உறிஞ்சுகிறது. ஒரு பகுதி நீராவியாகி மேலே செல்கிறது.

மழைக் காலத்தில் அதிக மழை பெய்வது ஏன்?

பருவமழைக் காலங்களில், வறண்ட வானிலை நிலவும் நாடுகளிலிருந்து சூடான காற்று பரவுகிறது. இந்த வெப்பக் காற்று, குளுமையான காற்றை வெளியேற்ற முயற்சிக்கிறது.

குளிர்ந்த காற்றோ, தான் இருக்கும் இடத்திலேயே நிலைத்திருக்க முயற்சிக்கிறது. ஆனால், குளிர்ந்த காற்றை வெப்பக்காற்று மிக வேகமாக நெட்டித் தள்ளுகிறது. 

இறுதியில், வெப்பக் காற்றுடன் மோதமுடியாமல், குளிர்ந்த காற்று வானை நோக்கி விரைகிறது. வெற்றிபெற்ற வெப்பக்காற்றில் அதிக அளவில் நீராவி இருக்கிறது.

இதன் காரணமாக அதிகமான மழை மேகங்கள் உருவாகின்றன. அந்த மேகங்கள் மழையாக கொட்டுகின்றன.

You may also like
‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.23 இல் கனமழை
சாலைகளில் மழைநீர்
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இன்று கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு
6 மாவட்டங்களில் இன்று கனமழை..

Leave a Reply