Home > தொடர்கள் > வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3

வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3

ராமசாமி வீட்டுக்கு வந்தவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

எல்லோரையும்விட சினனத்தாயம்மாளும், நாகம்மாளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு வீட்டில் என்ன நடந்தது?

தந்தை பதறினார். பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினார். ராமசாமியின் வெளியூர் நண்பர்களுக்கு கடிதங்கள் அனுப்பினார். தந்திகள் அனுப்பினார். 2 ஆயி ரம் ரூபாய் வரையில் செலவு செய்து சோர்ந்து போனார். மகனை இழந்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்துவிட் டார்.

வீடு பழைய நிலைக்கு திரும்பியது. ராமசாமியை வியா பாரத்தில் ஈடுபடுத்துவதுதான் நல்லது என்று வெங்கட்ட நாயக்கர் கருதினார். தனது பெயரில் இருந்த மண்டியின் பெயரை ஈ.வெ.ராம சாமி நாயக்கர் மண்டி என்று பெயர் மாற்றம் செய்து அனைத்துப் பொறுப்புக்களையும் மகனிடம் ஒப்படைத்து விட்டார்.

ராமசாமியும் பழைய ராமசாமி இல்லை. குடும்பத்தி லும், சமூகத்திலும் பொறுப்புள்ள மனிதராக மாறத் தொடங்கினார். அவருடைய முழுத்திறமைகளும் இப்போது வெளிப்படத் தொடங்கியது. வியாபாரம் விரிவடைந்தது.

நகரின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டார். மத வேறுபாடு, ஜாதி வேறுபாடு எதையும் அவர் பொருட் படுத்தவதில்லை. அனைத்துப் பிரிவிலும் அவருக்கு நண்பர்கள் அதிகரிக்கத் தொடங்கினர்.

அதிகாரிகள், அனுபவஸ்தர்கள், அறிவாளிகளின் தொடர்பு தேடிவர ஆரம்பித்தது. ஒருமுறை ஈரோட்டில் பிளேக் நோய் பரவியபோது தன் உயிரையும் பொருட் படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க அரும்பாடு பட்டார்.

1905 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 14 ஆண்டுகளில் வர்த்தகர் என்ற முறையி லும் சமூக ஊழியர் என்ற முறையிலும் ‘நாயக்கர்’ என்று அழைக்கப்பட்ட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பிரபலமானார்.

பதவிகளும் பொறுப்புகளும் அவரைத் தேடி வந்தன. வர்த்தகப் பொறுப்பை ஏற்கனவே மகனிடம் ஒப்படைத்து விட்ட வெங்கட்ட நாயக்கர் பொதுக்காரியங்களிலும் மகனையே ஈடுபடுத்தினார்.

இப்படியாவது தெய்வ நம்பிக்கை உண்டாகட்டும் என்று நினைத்தோ என்னவோ, ராமசாமியை தேவஸ் தான கமிட்டியின் தலைவராகவும், செயலாளராக வும் ஆக்கினார்கள்.

ஆனால், தன்னிடம் கொடுக்கப்படும் பொறுப்புகளை நாணயமாக நிறைவேற்றுவாரே தவிர தெய்வ நம்பிக்கை எதுவும் அவருக்கு வரவில்லை.

கோவில் பொறுப்புகளில் ஈடுபட்ட ராமசாமி நாயக்கர் பல கோவில்களைப் புதுப்பித்தார். பல கோவில்களைப் பழுது பார்த்தார். கடனிலிருந்த தேவஸ்தான கமிட்டியை அதிலிருந்து மீட்டு சில வருடங்களிலேயே செலவு போக 45 ஆயிரம் ரூபாய் சேமித்துக் கொடுத்தார்.

கௌரவ நீதிபதியாக 12 ஆண்டுக்காலம் பதவி வகித்தார் தாலுகா போர்டு உப-தலைவர், வணிகர் சங்கம், நாயுடு சங்கம், மகாஜன உயர்நிலைப்பள்ளி, சமரசக் குழு, அர்பன் வங்கி, சஙகீத சபை போன்ற 29 பதவிகளில் நாயக்கர் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

இவற்றில் மிக முக்கியமான ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவியாகும்.

1919 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபடும்வரை நகரமன்றத் தலைவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினா£.

காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நகரில் குடிநீர் கிடைக்க வழி செய்தார், கடைத்தெருவில் போக்குவரத் துக்கு மிகவும் சிரமமாக இருந்தது, கடைத் தெருவை விரிவு படுத்தாமல் போக்குவரத்தையும், நெரிசலையும் சமாளிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த நாயக்கர், அந்த கடைத் தெருவின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அந்தக் கடைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாயக்கரின் வசதி மிக்க நண்பர்கள். ஆனால் நாயக்கர் எதையும் பொருட்படுத்தவில்லை பெரிய மாடிக் கடைகள் பலவும் உடைத்தெறியப்பட்டன நண்பர்கள் வசைபாடினார். ஆனால் மக்கள் நாயக்கரைப் புகழ்ந்தனர்.

பட்டாடை அணிவது, சிகரெட், வெள்ளை சுருட்டுப் புகைப்பது வெற்றிலைப் பாக்குப் போடுவது போன்றவை அவரது அன்றாடப் பழக்கங்களாக இருந்தன.

1911 ஆம் ஆண்டு வெங்கட்ட நாயக்கர் காலமானார், வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரது உடல் எரியூட்டப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ராமசாமி நாயக்கர் அவ்வாறு செய்யவில்லை. ஈரோடு ரயில் நிலையம் அருகில் அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்தார்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. தந்தையை அடக்கம் செய்த இடத்தை ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தும் நிலை உருவானது. அதைத் தடுத்து விட்டார் ராமசாமி.

நாட்டு விடுதலைக்காகப் போராடி வந்த காங்கிரஸ் இயக்கத்தின் மீது அவருக்கு அக்கறை இருந்தது. போக்குவரத்துக்கு மையப் பகுதியாக இருந்ததால் ஈரோடு வழியாகச் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் பலர் ஈரோட்டில் இறங்கி நாயக்கர் வீட்டில் தங்கி உணவருந்தி விட்டுப் பயணத்தைத் தொடர்வது வழக்கம்.

அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களான டாக்டர் பி.வரதாஜுலு நாயுடு, ராஜாஜி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

டாக்டர் வரதராஜுலு நாயூடு காங்கிரசின் மிகப் பெரிய பேச்சாளராக இருந்தார். மக்களுக்கு சுலபமாகப் புரியும் விதத்தில் எளிமையாக அரசியல் நிலைமையை விளக்குவார்.

இரண்டு மணி நேரம் கூட தொடர்ந்து பேசுவார். அவருடைய கூட்டம் என்றால் கிராமஙகளிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளில் வந்து கலந்து கொள்வார்கள். அத்துடன் டாக்டர் நாயுடு ‘தமிழ்நாடு’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையையும் நடத்தினார். தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் முக்கியமான பிரச்சாரக் கருவியாக அந்த நாளிதழ் பயன்பட்டது,

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்புகளில் பெரும்பான்மையாக பிராமணர்கள் இடம்பெற்று இருந்தனர்.

சமுதாயத்தில் மிகக்குறைவாக இருப்பவர்கள் பெரும்பா லான இடங்களை ஆக்கிரமித்து இருந்ததை எதிர்த்து இந்தியாவின் பல பகுதிகளில் எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது. தங்களுக்கும் கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித் துவம் அளிக்க வேண்டும் என்று பிராமணர் அல்லாதார் கோரிக்கை விடுத்தனர்.

சென்னையின் பிரபல மருத்துவர்களில் ஒருவர் டாக்டர் சி,நடேச முதலியார். இவர், 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி “சென்னை திராவிடர்களின் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். அவர் அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றினார்.

பிராமணரல்லதார் இயக்கத்தைப் பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

1916 ஆம் வருடம் நவம்பர் 20 ஆம் தேதி சென்னை விக்டோரியா பொது அரங்கில் பிராமணரல்லாத தலை வர்களின் கூட்டம் நடைபெற்றது. டாக்டர் நாயர், தியாக ராயர் உட்பட 30 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண் டனர்.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி பிராமணர் அல்லாத சாதி இந்துக்களின் அரசியல் நலனை மேம்படுத்த ‘தென் இந்திய நலவுரிமைச் சங்கம்’ என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

தென் இந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயர் படிப்படியாக கைவிடப்பட்டு ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று அழைக்கப்பட்டது.

அது தமிழில் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரைப் பெற்றது.

கல்வி வசதியிலும், வேலை வாய்ப்பிலும், கல்வி நிலைய அமைப்புகளிலும் அனைத்துச் சமூகப் பிரிவினருக்கும் உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியது.

ஆனால், இந்தச் சங்கம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குத் துதிபாடுவதாகவே இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி போனால் பிராமணர் ஆதிக்கம் வந்துவிடும் என்ற நிலையும் இருந்தது. எனவே ஆங்கிலேயர் ஆட்சியே மேல் என்று வாதாடினர்.

ஆனால், நீதிக்கட்சியின் ஆங்கிலேய ஆதரவு நிலைப் பாட்டை காங்கிரஸ் இயக்கம் பலமாக எதிர்த்தது,

நீதிக்கட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த காங்கிர ஸிஸ் இருந்த பிராமணர் அல்லாத தலைவர்கள் புதிய சங்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தனர்.

அவர்கள் சென்னை மாகாண சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை தொடங்கினார்கள். 1917 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்தச் சங்கம் தொடங்கப்பட்டது.

இந்தச் சங்கத்தின் தலைவராக திவான் பகதூர் கேசவப் பிள்ளை தேர்ந்தெடுக்கப் பட்டார், உப-தலைவர்களாக லாட் கோவிந்ததாஸ். ஈ.வெ.ராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப்பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை சீனிவாசப்பிள்ளை,

பிராமணர் அல்லாதோரின் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டே அவர்களை பெருமளவில் காங்கிரஸ் கட்சிக் குள் கொண்டு வருவது ஆகும்.

தமிழர்கள் தமிழ் மொழியில் பேசவேண்டும் என்று இந்தச் சங்கம் வலியுறுத்தியது. அதுவரை கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசிவந்த பல தலைவர்கள் இதன் காரணமாக இனிய தமிழில் பேசத் தொடங்கினர்.

இந்தச் சங்கம் பலமான அமைப்பாக வளருவதைக் கண்ட நீதிக்கட்சியினர், இதை ‘பிராமணர் அடிமை’களின் சங்கம் என்றனர்.

1918 ஆம் ஆண்டு சென்னை மாகாண சங்கத்தின் தஞ்சை-திருச்சி மாநாடு நடைபெற்றது.

“மேடைகளில் எவரேனும் அயல் மொழியில் பேசினால் பொது மக்கள் அவரைத் திருத்த வேண்டும்” என்று திரு.வி.க. அழுத்தந் திருத்தமாக கூறினார்.

1919 ஆம் ஆண்டு சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராக ராமசாமி நாயக்கர் செயல்பட்டார். மாநாட்டுக்கு வந்திருந்த திரு.வி.க. டாக்டர் நாயுடு முதலிய தலைவர்கள் நாயக்கரின் வீட்டிலேயே தங்கிருந்தனர்.

அவர்கள் ராமசாமியின் வீட்டில் தங்கியிருந்தபோது காணப்பட்ட தோற்றத்தை திரு.வி.க. இப்படி வர்ணிக் கிறார்.

“அவர் தலையிலும், இடுப்பிலும், உடலிலும் பட்டாடை ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணி பூத்த பொன் வண்ணமாகப் பொழிந்தது. அவர் ஜமீந்தாராகவும் அவருடைய மனைவி ஜமீந்தாரிணியாக வும் காணப்பட்டனர்”

அவர்கள் இப்படி பார்த்த ஆறே மாதங்களில் ராமசாமி நாயக்கரின் இந்த ஆடம்பர வாழ்க்கை மாறிவிட்டது.

சென்னை மாகாண சங்கம் அதிக காலம் நீடிக்கவில்லை. சட்டமன்ற மேலவையில் பிராமணர் அல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப் படவேண்டும் என்பதை ஆங்கிலேய அரசாங்கம் 1920 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. அதன்பின் சென்னை மாகாண சங்கம் செயலாற்றுப் போனது.

சங்கத்தின் தலைவரான பி,கேசவப்பிள்ளை நீதிக்கட்சி யில் சேர்ந்தார். இதர தலைவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டனர்.

1919 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகக் கொடூரமான ஆண்டு. பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. ஜெனரல் டயர் என்கிற பிரிட்டிஷ் அதிகாரி ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் அமைதியாக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

மக்களை குருவிகளைச் சுட்டு வீழ்த்துவதுபோல காட்டு மிராண்டித் தனமாகச் சுட்டுக் கொன்றான். இதையடுத்து நாடே கொதிப்படைந்தது.

இப்படிப்பட்ட கொடூரமான பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் நினைத்தார். அதற்காக காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்தார்.

ஏற்கெனவே, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே அவர் காங்கிரஸை ஆதரித்து வந்தார். ஆனால், உறுப்பினராக வில்லை.

காங்கிரஸில் சேருவதற்காக, அவர் தான் வகித்த ஈரோடு நகராட்சி தலைவர் பதவி உள்பட 26 பதவிகளை ராஜினாமா செய்தார்.

நாயக்கர் காங்கிரசில் பணியாற்ற முற்பட்ட போது உச்சிக் குடுமியும், அடர்ந்த மீசையும் வைத்திருந்தார். உருண்டு திரண்ட உடலோடு இருந்தார். நெற்றியில் சாத்துக் கோடும், பெரிய பொட்டும் வைத்திருப்பார்.

You may also like
பெரியாரை நினைவு கூர்ந்த தமிழகம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
அற்புதங்களின் குவியல் அண்ணா!
தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!

Leave a Reply