Home > ஆன்மீகம் > கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

பாலில் நெய் மறைந்திருப்பதை போல எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறான். எங்கிருந் தாலும் அவனை வணங்கலாம் என்பது ஒரு கருத்தாக இருந்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, பலன் இரட்டிப்பாக கிடைக்கும். ஒரு துணியை வெயிலில் காயப்போட்டால் உலர்ந்துபோகும். அதே துணியை, ஒரு லென்சின் கீழ் வைத்தால் கருகிவிடும். சூரியக் கதிர்கள் ஒன்றுதான். ஆனால் அது குவியும்போது சக்தி அதிகமாகிறது. வெளியிடங்களைவிட கோயிலில் இறைவனை வழிபடும்போது, மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.
இறை வழிபாட்டுக்கு முக்கியத் தேவையே மன ஒருமைப்பாடுதான். அந்த சமயத்தில் செய்யும் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். இது மட்டுமின்றி, கோயில்களுக்கு மனச்சுத்தமுடைய அடியார்கள் பலர் முற்காலத்தில் வந்து சென்றுள்ளனர்.
நல்லவர்களின் பாதம்பட்ட இடத்தில் நின்றாலே, நம் பாவங்கள் கருகிப்போகும். கோயிலில் உள்ள படிக்கட்டுகள் கூட அடியவர்களின் திருவுருவங்கள் என கூறப்படுவதுண்டு. எனவே வெளியிடத்தில் கடவுளை பிரார்த்தித்தாலும் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply