Home > ஆன்மீகம் > சிவதரிசன பலன்கள்

சிவதரிசன பலன்கள்

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட, லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என்று மகா பாரதத்தில் கூறியிருக்கிறார் வியாசர். அதனால்தான் எல்லா சிவாலயங்களிலும் லிங்க உருவில் சிவனை வழிபடுகிறோம்.
சிவபெருமான் மலை மீது அமர்ந்து அருள் பாலிப்பதால் அவர் மேனியில் உள்ள வெப்பத்தை குறைக்க, அபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சிவராத்திரி போன்ற முக்கிய நாட்களில் சிவனுக்கு அபிஷேகம்தான் பிரதான நிகழ்ச்சி. குளுமை நிறைந்த வில்வ இலைகளால் அவருக்கு அர்ச்சனை செய்கிறோம்.
சிவபெருமானை காலையில் தரிசித்தால், பிணிகள் நீங்கும், நண்பகலில் தரிசனம் செய்தால் செல்வம் பெருகும். மாலையில் தரிசனம் செய்தால், பாவம் போகும். அர்த்த சாமத்தில் தரிசனம் செய்தால், முக்தி கிடைக்கும்.

Leave a Reply