Home > ஆன்மீகம் > நரசிம்மர் வழிபாடு பலன் என்ன?

நரசிம்மர் வழிபாடு பலன் என்ன?


சித்திரை அல்லது வைகாசி வளர்பிறை சதுர்த்தசியன்று நரசிம்ம ஜெயந்தி வரும் தினமும் பிரதோஷ வேளையில் (மாலை 4.30-6) நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்து, கயவனாக இருந்த சுவேதன் என்பவன். மறுபிறவியில் பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றான்.
நரசிம்மரின் பயம் போக்கும் மந்திரம் என்ன?
பயந்த சுபாவம் உள்ளவர்கள் நரசிம்மரை வணங்கி இந்த மூல மந்திரத்தை மூன்று முறை சொல்லி பயனடையலாம்.
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
பிதுர்தோஷம் நீங்க நரசிம்மரை வணங்கலாமா?
பிதுர் எனப்படும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், அவர்களால் முற்காலங்களில் ஏற்பட்ட சாபம் ஆகியவை நீங்க நரசிம்ம பூஜை உகந்தது. தெய்வங்களை நிந்திப்பது ஒற்றுமையாக இருந்த குடும்பங்களை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவது போன்ற பாவங்களினால் பெரும் துன்பங்களை அனுபவிப்பவர்களும் உண்டு. இவர்களுக்கு எளிய சாபநிவர்த்தி முறை இருக்கிறது.
லட்சுமி நரசிம்மர் படம் வைத்து, பால் அல்லது பானகம் வைத்து காலை அல்லது மாலையில் நரசிம்ம ப்ரபத்தி ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும். சக்தி வாய்ந்த இந்த ஸ்லோகம், அகோபில மடம் 44வது பட்டம் அழகிய சிங்கரும் ஸ்ரீ ரங்கம் கோபுரத்தை நிர்மாணித்தவருமான முக்கூர் ஸ்வாமிகள் அருளியதாகும்.

  1. மாத ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ :
  2. ப்ராதா ந்ருஸிம்ஹ : ஸகா ந்ருஸிம்ஹ:
  3. வித்யா ந்ருஸிம்ஹ : த்ரவிணம் ந்ருஸிம்ஹ :
  4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ : ஸகலம் ந்ருஸிம்ஹ :
  5. இதோ ந்ருஸிம்ஹ : பரதோ ந்ருஸிம்ஹ:
  6. யதோ யதோ யாஹி : ததோ ந்ருஸிம்ஹ :
  7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித் :
  8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:
    சமஸ்கிருதம் படிக்க முடியாதவர்கள் இதன் தமிழாக்கத்தைச் சொல்லலாம்.
  9. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
  10. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
  11. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
  12. எஜமானனும் நரசிம்மனே ; எல்லாமும் நரசிம்மனே
  13. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
  14. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
  15. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
  16. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.
    நரசிம்மர் பற்றிய நூல்கள் எவை?
    நரசிம்மர் வரலாறு பல முக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. அவை வருமாறு.
  17. பாகவதம் 2. ஹாரிவம்சம் 3. விஷ்ணுபுராணம் 4. விஹகேந்திர ஸம்ஹிதை 5. பத்ம ஸம்ஹிதை 6. ஈசுவர ஸம்ஹிதை 7. பராசர ஸம்ஹிதை 8. ஸாத்வத ஸம்ஹிதை 9. சேஷ ஸம்ஹிதை 10. வைகாசை ஆகமம் 11. விஷ்ணு ஸம்ஹிதை 12. ஸ்ரீ பிரஸன்ன ஸம்ஹி 13. விஷ்ணு தந்திரம் 14. விஷ்வக் சேன ஸம்ஹிதை 15. ஹயசீர்ஷ ஸம் ஹிதை 16. பரமேசுவர ஸம்ஹிதை 17. மத்ஸ்ய புராணம் 18. சில்ப ரத்தினம் 19. ப்ரபஞ்ச சாரஸங்கிரஹம் 20. நரசிம்ம புராணம்

Leave a Reply