Home > ஆன்மீகம் > பிரசாதத்துக்கும் சண்டையா?பிரசாதத்துக்கும்

பிரசாதத்துக்கும் சண்டையா?பிரசாதத்துக்கும்

இறைவனுக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்தை சிறிதளவாவது நாம் உண்ண வேண்டும். சிலர் பிரசாதம் வேண்டாமெனச் சொல்லி விடுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் பிரசாதத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்த இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதத்துக்கு தனி மரியாதை இருக்கிறது.
தெய்வங்கள் மனிதனைப்போல நேரடியாக உணவை ஏற்பதில்லை. அவற்றின் பார்வை மட்டுமே அதில் படுகிறது. இதை சமஸ்கிருத்தில் ‘த்ருஷ்டிபோக்’ என்பவர். கண்ணொளிபட்ட பொருள் புனிதத்தன்மை பெறுகிறது. இதைச் சாப்பிடுபவர்களின் மனம் தூய்மையடைகிறது.
உள்ளத்தில் பக்தியை உருவாக்குகிறது. எனவே பிரசாதம் உரிய மரியாதையுடன் பெற்றுச் செல்லவேண்டும். பிரசாதத்தை பகிர்ந்து சாப்பிடும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply