Home > ஆன்மீகம் > பேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்

பேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்

பசுவிடமிருந்து நாம் பெறும் கோமியம் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதாகும். புதுமனை புகுவிழா வீட்டில் மிக முக்கியமான நிகழ்ச்சியே கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அதுதன் கோமியத்தை இட வேண்டும் என்பதே.

இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்போர் அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்பது மட்டுமல்ல; எல்லாச் செல்வங்களையும் குறைவறப் பெற்று திகழ்வார்கள் என்பதுமாகும்.

குழந்தை பிறந்து சில தினங்கள் பொறுத்து நடைபெறும் ‘புண்யாஹவாசனம்’ செய்யும் வீட்டிலும் மற்றும் இதைப்போல நடக்கும் முக்கியமான சுப நிகழ்ச்சிகளின்போதும் இவ்விதம் கோமியம் தெளிக்கப்படும்.

வீட்டிற்கு சிறப்புச் செய்வார்கள்; இவ்வாறு தெளிப்பதன் மூலம் அந்த நிகழ்ச்சி சிறப்படையும்.

புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின் போது பசுவையும் கன்றையும் அழைத்து வருவார்கள்.

அது அந்த புதுமனையில் லட்சுமி தேவியை எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.

பசுவின் கழுத்தில் மாலை அணிவித்தும், நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து நிற்கும் தோற்றமும் அங்கு வந்த பின்னர் அது தன்னுடைய கன்றுக்குக் பால் கொடுக்கும்போது அந்த கன்றை ஆதரவாக நாக்கு கொண்டு நக்கிக் கொடுக்கும் பாங்கும் லட்சுமிதேவி நமக்கு நிறைவான அருளை மனம் கனிந்து செய்வது போன்ற ஒருதோற்றத்தையே தருவதாகும்.

Leave a Reply