Home > ஆன்மீகம் > பசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்

பசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்

பசுவின் உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தேவர்கள் வாசஞ் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.
தலை – சிவபெருமான்
நெற்றி – சிவசக்தி
வலது கொம்பு – கங்கை
இடது கொம்பு – யமுனை
கொம்பின் நுனி – காவிரி, கோதாவரி
முதலிய புண்ணிய நதிகள், சராசரி உயிர் வர்க்கங்கள் உரைகின்றன.
கொம்பின் அடியில் – பிரம்மா
மூக்கின் நுனி – முருகன்
மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
இரு கண்கள் – சூரியன், சந்திரன்
வாய் – சர்ப்பகரர்கள்
பற்கள் – வாயுதேவன்
நாக்கு – வருணதேவன்
நெஞ்சு மத்திய பாகம் – கலைமகள்
கழுத்து – இந்திரன்
மணித்தலம் – இயமனும், இயக்கங்களும்
உதடு – உதாயத்தமன சந்தி தேவதைகள்
முரிப்பு (கொண்டை) – பன்னிரு ஆதித்யர்கள் (சூரியர்கள்)
மார்பு – சாத்திய தேவர்கள்
வயிறு – பூமி தேவி
கால்கள் – அனிலன் என்னும் வாயு தேவன்
முழந்தாள் – மருத்து தேவர்
குளம்பு – தேவர்கள்
குளம்பின் நுனி – நாகர்கள்
குளம்பின் மேல்பகுதி – அரம்பையர்
முதுகு – உருத்திரர்
யோனி – சந்தமாதர் (ஏழு மாதர்)
குதம் – லட்சுமி
முன் கால் – பிரம்மா
பின் கால் – உருத்திரன், தன் பரிவாரங்களுடன்
பால் மடி (முலை) – ஏழு சமுத்திரங்கள்
சந்திகள் தோறும் – அஷ்டவசுக்கள்
அரைப் பரப்பில் – பிதிர் தேவதை
வால் முடி – ஆத்திகன்
உரோமம் – மகா முனிவர்கள்
எல்லா அங்கங்கள் – கற்புடைய மங்கையர்
மூத்திரம் – ஆகாய கங்கை
சாணம் – யமுனை
சடதாக்கினி – காருக பத்தியம்
இதயம் – ஆகவணியம்
முகம் – தட்சரைக்கினியம்
எலும்பு, சுக்கிலம் – யாகத்தொழில் முழுவதும்

Leave a Reply