Home > ஆன்மீகம் > எல்லா பாவங்களும்போக சொல்லவேண்டிய தேவியின் பிரார்த்தனை

எல்லா பாவங்களும்போக சொல்லவேண்டிய தேவியின் பிரார்த்தனை

எல்லா பாவங்களும்போக சொல்லவேண்டிய தேவியின் பிரார்த்தனை

தெய்வத்தைப் பிரார்த்தனை செய்துதான் நலன்களை மக்கள் அடைய முடியும் என்ற பிரார்த்தனைகளில் ‘கவசம்’ என்பது ஒன்று. அதாவது தலை முதல் பாதம் வரையில் உள்ள அங்கங்களை ரட்சிக்கும்படி பிரார்த்திப்பது.

ஜெகன் மாதாவான ‘துர்கா’ தேவியைக் குறித்து செய்யப்பட்டுள்ள, ‘வஜ்ர பஞ்சரம்’ என்கிற ஸ்துதி மிகவும் உயர்ந்தது. ஸ்ரீகந்தர், அகஸ்தியருக்கு இதை உபதேசம் செய்ததாக உள்ளது.

சகல பாவங்களையும் போக்கி மக்களை ரட்சிக்கக் கூடியது என்று கூறப்பட்டது. இது மிக ரகசியமானது என்றும், சிரத்தையுள்ள நல்லவர்களுக்கு மட்டுமே சொல்ல வேண்டியது என்றும் கூறியுள்ளார் ஸ்கந்தர்.

துர்க்கா தேவிக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் இருப்பதால் அவைகளில் சில நாமாக்கள் இதில் வரும் இந்த ‘வஜ்ர பஞ்சகம்’ ஸ்தோத்திர ரூபமாக உள்ளது.

அதுவே இங்கு வசன நடையில் எழுதப்படுகிறது. ‘ஏ’ பிரும்மணி? தாங்கள் என் மேற்புறத்தை ரட்சிக்க வேண்டும். ஏ.வைஷ்ணவி! தாங்கள் என் கீழ்ப்புறத்தையும், ஈசான கோணம், அக்னி, நிதிரு, வாயு கோணத்தையும், ஏ, அமலே! தாங்கள் நெற்றிக்கட்டையும் உமாதேவி புருவத்தையும்…

‘திரிலோசனரின் மனைவி நேத்திரங்களையும் கிரிஜா நாசியையும், ஜெயா மேலு தட்டையும், விஜயா கீழுதட்டையும் ஸ்ருதிஸ்வனா இரண்டு காதுகளையும் ஸ்ரீதேவி பற்களையும், சண்டிகா கன்னங்களையும், வாணி நாக்கையும், ஜெயமங்களா முகவாயையும் கார்த்தியாயினி முகத்தையும், நீலகண்டி கண்டத்தையும்’.

‘வராகி கழுத்தையும் பூர்வ சக்தி தோள்களையும் ஐந்த்ரீ புஜத்தையும், பத்மா கைத்தலத்தையும், கமலா கை விரல்களையும், விரஜா நகங்களையும், சூரிய சக்தி கை இடுக்குகளையும், ஸ்தலசரீ வச்ச ஸ்தலத்தையும், தரித்ரீ இதயத்தையும், ஷணாசாக்னீ வயிற்றையும் ரட்சிக்கட்டும்’.

‘ஜகதீஸ்வரி உதர மடிப்பையும், போகதீ நாடியையும் அஜா தேவி, பிருஷ்டத்தையும், விகடாதேவி, கடி பிரதேசத்தையும், பரமாதேவி நிதம்பத்தையும், குஹரிணி குஷ்யத்தையும், அபாய ஹந்திரீ பாயு ஸ்தானத்தையும் விகுலா தொடைகளையும், லலிதா முட்டுக்களையும் ஜெயாதேவி அடித்தொடைகளையும், கடோதர தேவி குதிகால்களையும், ரசதரசராதேவி பாதங்களையும் உத்ராகால் விரல்களையும் சாந்த்ரீ நகங்களையும்’.

தலவாஹினி உள்ளங்கால்களையும், லட்சுமி தேவி எங்கள் கிரகங்களையும், சேமகரீ நாங்கள் இருக்குமிடத்தையும், பிரியகரி புத்திரர்களையும், சனாகரி ஆயுளையும், மகாதேவி கீர்த்தியையும் ரட்சிக்கட்டும்.

தனுர்தரி தர்மத்தையும், குலதேவி குலத்தையும், சர்வாணி யுத்தத்தில் ரட்சிக்கட்டும், சத்கதி ப்ராதாசுஸ்கதியையும் ரட்சிக்கட்டும்.

இப்படியாக மகிரிஷிகள், இந்திராதி தேவர்கள் கந்தர்வர்கள், சாரணர்கள் யாவரும் துர்கா தேவியை பிரார்த்தித்தும் அம்பிகை அவர்கள் முன்தோன்றி, நீங்கள் செய்த துதியால் நான் சந்தோஷ மடைந்தேன்.

உங்கள் குறைகளைப் போக்குகிறேன். நீங்கள் கவலையின்றி உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். எவர் இந்த ஸ்துதியை பாராயணம் செய்கிறாரோ அவரை நான் அனுதினமும், அனவாதமும் கவனித்துக் கொண்டிருந்து ரட்சிப்பேன்! என்கிறாள்.

இந்த, ‘வஜ்ர பஞ்சர’ ஸ்லோகத்தை எழுதி பூஜையில் வைத்துக் கொள்ளலாம். ஜலத்தை வைத்து ஸ்லோகத்தை ஜெபித்து தீர்த்தத்தை சாப்பிட ரோகங்கள் நீங்கும்.

ஆபத்துகள், பேய், பிசாசு அண்டாது, சகல ஷேமங்களும் ஏற்படும் என்று அனுக்கிரகம் செய்து மறைந்தாள். இந்த ‘வஜ்ர பஞ்சகம்’ என்ற ஸ்துதி படிப்பதன்மூலம் பல நன்மைகளும், நம் பாவங்களும் நீங்கும்.

Leave a Reply