Home > ஆன்மீகம் > பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் – 1 அளவு
பசும் தயிர்- 2 அளவு
பசும் நெய் – 3 அளவு
கோசலம் – 1 அளவு
கோமலம் – 1 அளவு
தர்ப்பை கலந்த நீர் – 3 அளவு
இவ்வாறு பஞ்ச கவ்வியத்தைக் கலக்கும்போது தக்க மந்திரங்களை இடையறாது உச்சரிக்க வேண்டும். பசும் பால்தான் ஏற்றது. எருமைப்பால் முதலியவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன. பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்பு உண்டு.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும், நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும், கருநிறப்பசுவிடமிருந்து நெய்யும், செந்நிறப் பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே எடுத்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகக் பொருள்களில் பஞ்ச கவ்யமே தலை சிறந்தது.
இவ்வாறு சிறந்த பஞ்சகவ்யத்தை தமிழில் ‘ஆனைந்த’ என்பர்.
பசும்பாலில் சந்திரனும், பசுவின் தயிரில் வாயு பகவானும் கோமயத்தில் வருண தேவனும், பசும் சாணத்தில் அக்னிதேவனும், நெய்யில் சூரிய பகவானும் வாசஞ் செய்கின்றனர்.
இதுநோய் நீக்கும் மாமருந்தாகும். ஒரு பலம் கோமூத்திரம், கட்டை விரலில் பாதி சாணம், ஏழு பலம் பால், இரண்டு பலம் தயிர், ஒரு பலம் தர்ப்ப ஜலம் ஆகியவை கலந்ததே பஞ்சகவ்யம் எனப்படும். இதனை பிரம்ம கூர்ச்சம் என்றும் கூறுவர்.

Leave a Reply