இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிபலன் உண்டு.
பால் நீண்ட வாழ்வையும் தயிர், புத்திர விருத்தியையும், நெய் மோட்சத்தையும் பஞ்சகவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும், பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச் சிறப்பு, பசுவின் மடிகளில் ஏழுசமுத்திரங்கள் வாசஞ் செய்வதால் பால் அபிஷேகம் ஏழு சமுத்திரங்களைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்ததாகக் கருதப்படும்.