Home > கட்டுரைகள் > அம்பிகா ராதாவுக்கு எம் ஜி ஆர் ஏன் 40 ஏக்கர் அரசு நிலம் கொடுத்தார் தெரியுமா?

அம்பிகா ராதாவுக்கு எம் ஜி ஆர் ஏன் 40 ஏக்கர் அரசு நிலம் கொடுத்தார் தெரியுமா?

எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார்.

அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முன்னணி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்.

இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் சொல்லி, சிங்கப்பூர்-இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு,

டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து எம்ஜியாருக்கு சிகிச்சையளிக்க எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.

கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார்.

அப்போது சகோதரிகள் கானுவை சகல விதத்திலும் கவனித்துக் கொள்ள, அவர் இங்கேயே தங்கி சிகிச்சை மேற்கொண்டார். பிழைத்த எம்ஜியார் 40 ஏக்கர் அரசு நிலத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்.

அங்கு அவர்கள் ஒரு ஸ்டியோ கட்டினார்கள்.காலங்கள் உருண்டோடின. ஸ்டியோக்களின் தேவை குறைய அது பிளாட்டாக மாற்றம் பெற்றது. அந்த இடத்துக்கு டாக்டர் கானு நகர் என்ற பெயர் சகோதரிகளால் சூட்டப்பட்டது..

அது மட்டும் இல்லாம அதற்கு பிரதிபலனாக சென்னை விருகம்பாக்கத்தில் இருந்த பொறம்போக்கு நிலத்தை, அம்பிகா, ராதா, அவரது தாயார் சரசம்மா பெயரில் பட்டா போட்டு கொடுத்தார் எம்ஜிஆர்.

அந்த நிலத்தில் தான் தற்போது ARS GARDEN என்ற பெயரில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.

எம்ஜிஆர்க்கு அம்பிகா, ராதா சகோதரிகள், மீது அவர்களும் மலையாளிகள் என்பதால் ஒரு தனி பாசம் இருந்தது.

எழுதியவர் Nazar Kran

Leave a Reply