Home > கட்டுரைகள் > அவ்வையார் சொன்ன தொழில் வெற்றி ரகசியம்

அவ்வையார் சொன்ன தொழில் வெற்றி ரகசியம்

ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஒழுங்கான நடையே ஒழுக்க நடையாகும். ஒழுக்கம் உயர்வைத் தரும். ஒழுக்கம் உயிரினும் மேலானது. ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் சீர்பட வாழலாம். நேர்மையான செயல், நேர்மையான உள்ளம், நேர்மையான பேச்சு, நேர்மையான நடத்தை ஆகியவை மனிதனுக்கு அவசியம்.
நீ துன்பம் தருபவற்றை நாடக்கூடாது; ‘நைவன நணுகேல்’ என்று நான் சொல்வது இதைத்தான். நாம் ஒன்றை நாடும்போது, அதனால் கேடு வருமா என்பதை பார்க்க வேண்டும். நாம் தொடங்க நினைக்கும் தொழிலின் தன்மையையும் பார்த்து ஈடுபட வேண்டும். அழிவைத் தரும் செயல்களில் நம்மை ஆட்படுத்திக் கொள்ளலாகாது. நலம் தருபனவாக ஆதாயம் அளிப்பவையாக எவை உள்ளனவோ அவற்றையே நாடுதல் வேண்டும்.
ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து நிதானித்து செய்ய வேண்டும். அதன் நிறை-குறைகள் தெரிந்து நுணுக்கத்தை முழுமையாக அறிந்து, பிறகு தனது பலத்தையும் பார்த்து கொண்டு செய்ய வேண்டும். நமது தொழிலால் நாமும் நைந்து போகக் கூடாது. மற்றவர்களும் பாதிக்கக் கூடாது. இதுவே ஒரு தொழிலில் நீ வெற்றி பெரும் ரகசியம்.

Leave a Reply