Home > கட்டுரைகள் > இந்த மாயாஜாலம் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் நடக்குமா?

இந்த மாயாஜாலம் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் நடக்குமா?

இந்த மாயாஜாலம் தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் நடக்குமாதெரியாது. நல்லா யோசிச்சுப் பார்த்தா வாக்களித்த மக்களைத்தான் எல்லோரும் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள் என்பது புரியும்…

1991, 2001, 2011, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில்தான் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

2001 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடவே தகுதியற்றவராக இருந்தார்.அதாவது நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருந்தார்.

தேர்தலிலேயே போட்டியிட தகுதியற்றவர், மரபுகளை காலில்போட்டு மிதித்துவிட்டு முதல்வராக பதவியேற்றார்.பின்னர் நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.உடனே, முதல்முறையாக பன்னீர் முதல்வரானார்.பின்னர் டான்சி நிலத்தை திரும்ப ஒப்படைத்து தண்டனையிலிருந்து தப்பினார். பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் நீதிபதி தினகரன் என்பவருக்கு பெட்டிபெட்டியாக பணம் கொடுத்து சாதகமான தீர்ப்பு பெற்றார்…

அதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார்…

ஆகமொத்தம், இரண்டாவது தேர்தலிலேயே மூன்றாவது முறையாக அவரும், பன்னீர் ஒருமுறையுமாக மொத்தம் நான்கு முதல்வர்கள் பொறுப்பேற்று சாதனை படைத்தார்கள்…

அதாவது இரண்டு தேர்தல்கள் நான்கு முதல்வர்கள்!

அதுக்கப்புறம் 2006 தேர்தலில் திமுக ஜெயித்து கலைஞர் முதல்வரானார்…

2011 தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா நான்காவது முறையாக முதல்வரானார்… அதாவது மூன்றாவது தேர்தலில் நான்காவது முறையாக முதல்வரானார்…

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டார்…

முதல்வராக நீதிமன்றம் போய், முதல்வராகவே சிறைக்குப்போன முதல் முதல்வரானார் ஜெயலலிதா…

இப்பவும் பன்னீர் முதல்ராக வாய்ப்பு.இரண்டாவது முறையாக அவர் பதவியேற்றார்.மக்கள் முதல்வர் என்று ஜெயா டி.வி.புதிய முதல்வரை உருவாக்கி பன்னீரை டம்மியாக்கியது.

பிறகு கொஞ்சகாலம் வீட்டிலேயே இருந்தார் ஜெயலலிதா.கணக்குத்தெரியாத நீதிபதி குமாரசாமி தயவில் கோடிகோடியாக கொட்டிக்கொடுத்து ஜெயலலிதாவின் விடுதலைத் தீர்ப்பு பெறப்பட்டது.

அதன்பின்னர், மீண்டும் எம்எல்ஏ ஆகி, ஐந்தாவது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா…

அதாவது மூன்று தேர்தல்களிலேயே ஜெயலலிதா ஐந்து முறையும், பன்னீர் இரண்டு முறையுமாக, மொத்தம் ஏழு முதல்வர்கள் பதவியேற்ற மேஜிக் நடந்தது…

2016 தேர்தலில் ஜெயலலிதா ஆறாவது முறையாக பதவியேற்று அப்போலோவில் இறந்த பிறகு, பன்னீர் மூன்றாவது முறையாக முதல்வரானார்…

சொத்துக்குவிப்பு வழக்கில் இறந்த ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் என சிறைத்தண்டனை பெற்றதும், எடப்பாடி பன்னீர் செல்வம் முதல்வராக வாய்ப்புக் கிடைத்தது…

இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அது முடிவதற்குள் எத்தனை பேர் முதல்வராகப் போகிறார்களோ… தெரியவில்லை…

Leave a Reply