Home > கட்டுரைகள் > குழந்தைகளுக்கு முதல் சோறு

குழந்தைகளுக்கு முதல் சோறு

குழந்தைகளுக்கு முதல் சோறு கொடுப்பதை ‘அன்னப் பிரசானம்’ என்பர். கிராம மக்கள் தங்கள் குலதெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியிலும் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப் பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
அகவினி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும் சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்து சாதத்தை ஊட்ட வேண்டும். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஔஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால் குழந்தைக்கு காய்ச்சல், ஜலதோஷம், உள்ளிட்ட நோய் அண்டாது என்றும் அப்படியே வந்தாலும் ஔஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கிவிடும் என்பதும் விசேஷம்.

Leave a Reply