Home > கட்டுரைகள் > சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆட்டுக்கறி, எருமைமாட்டுக்கறி;

சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆட்டுக்கறி, எருமைமாட்டுக்கறி;

சிந்து சமவெளி நாகரீகத்தை சிந்து-சரசுவதி நாகரீகம் என்பதாக, வேத கலாச்சாரத்தின் முன்னோடியாக, முன்னிறுத்துவதற்கு இந்துத்துவக் கூட்டம் செய்து வரும் தொடர் முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக கண்டுபிடிப்பு ஒன்றை புதிய ஆய்வு முடிவுகள் முன்வைக்கின்றன.

பூனாவின் டெக்கான் கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் உத்திரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள அரப்பா நாகரீகத் தொடர்புடைய ஐந்து கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பகுதிகள் கி.மு. 2600 மற்றும் கி.மு 1900 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிடத் தக்க நகர வசிப்பிடங்களாக இருந்தன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள உணவுத் துணுக்குகளை (lipid residue analysis) ஆய்வு செய்த அவர்கள், சிந்து சமவெளி மக்கள் ஆட்டு இறைச்சி மட்டுமின்றி, எருமை மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் கூட உட்கொண்டனர் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

பசுக்கள் புனிதமானவை, மாட்டிறைச்சி என்பது இந்துக்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது, இந்து கலாச்சாரம் துவக்கம் முதலே அவற்றை ஒதுக்கி வைத்தது போன்ற வாதங்களை இது ஊதித் தள்ளி விடுகிறது.

ஆகவே, இனி சிந்து சமவெளி நாகரீகத்தை சிந்து-சரசுவதி நாகரீகம் என்று அவர்கள் உரிமை கொண்டாடினால், மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் உட்கொண்ட ஒரு நாகரீகத்திற்குத் தானே உரிமை கொண்டாடுகிறீர்கள் என்று எதிர்க் கேள்வி கேட்க வேண்டும்.

உண்மை வரலாறு உணர்த்தும் உண்மைகள் என்றுமே இந்துத்துவத்திற்கு எதிரானவை தான் என்பதை செவிட்டில் அறைந்து சொல்கிறது இந்த ஆய்வு.

நன்றி தோழர் SundaraCholan

Leave a Reply