Home > கட்டுரைகள் > மாவட்ட தலைநகர்களில் மாணவர்கள் நலனுக்காக மாபெரும் நூலகங்கள் வேண்டும்!

மாவட்ட தலைநகர்களில் மாணவர்கள் நலனுக்காக மாபெரும் நூலகங்கள் வேண்டும்!

அம்மா உணவகம் விவகாரத்தில் பொங்கிய சிலர், 10 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரத்தில் பொங்கியிருக்கவே மாட்டார்கள். ஒன்று அவர்கள் அப்போது சிறுவர்களாக இருந்திருக்க வேண்டும், அல்லது அம்மா ஆட்சியில் எதையும் பேச பயந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

நம் தமிழக மாணவர்களின் படிப்புக்குத் தேவையான புத்தகங்களை ஒரே இடத்தில் படிக்க வசதியாய் 2010ம் ஆண்டு உருவானதுதான் இந்த அண்ணா நூற்றாண்டு நுலகம்.

ஹிலாரி கிளிண்டன் வியந்து பாராட்டிய பெருமை கொண்டது நூலகம்.

நான் எனது M.Phil., ஆய்வுக் கட்டுரைக்கான தரவுகளை எடுக்க முதல் முறையாக 10 வருடங்களுக்கு முன்பு அங்கு சென்றேன், வியந்தேன். தமிழ்நாட்டில், சென்னையில், இப்படி ஒரு நூலகமா என வாயடைத்துப் போனேன்.

எனக்குத் தேவையான சினிமா தொழில்நுட்பம் பற்றிய புத்தகங்களை அலசிய போது, எனக்குக் கிடைத்த பல புத்தகங்கள் வெளிநாட்டு புத்தகங்கள், ஒவ்வொன்றின் விலையும் ஆயிரக்கணக்கில் இருந்தது. என்னால் அந்த புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கி தரவு எடுத்திருக்க முடியாது. அந்த அளவிற்கு பல புத்தகங்களை படித்து எனது ஆய்வுக் கட்டுரைக்கான தரவுகளை எடுத்தேன்.

நான் சென்ற அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அரங்கிலும் மாணவர்கள் நிறைய பேர் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழித்துச் சென்ற போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. அங்கிருந்த சில பல வசதிகள் காணாமல் போயிருந்தன. புதிய புத்தகங்களும் அதிக எண்ணிக்கையில் வருவதில்லை என்றார்கள்.

2011ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா பதவியேற்ற போது அந்த பிரம்மாண்ட நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்ற முயற்சித்தார். புதிய சட்டமன்ற வளாகத்தை மருத்துவமனையாக மாற்றியதைப் போலவே அந்த நூலகத்தையும் மருத்துவமனையாக மாற்றவும் முயற்சித்தார். பல கல்வியாளர்களும், அறிஞர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டார்.

மருத்துவமனைகள் தேவைதான், ஆனால், அதற்கு புத்தாக கட்டிடங்களைக் கட்டி அங்கு ஆரம்பிக்கலாமே. மருத்துவமனைக்கென்று பிரத்தியேக கட்டிட வடிவமைப்பு இருக்கும். நூலகங்களுக்கு என்று பிரத்தியே கட்டிட வடிவமைப்பு இருக்கும். அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கலைஞர் கருணாநிதி ஆரம்பித்தார் என்ற ஒரே காணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த பத்து ஆண்டுகளில் பொலிவிழந்து இருக்கிறது என்பதுதான் படிப்பாளர்கள் பலரது கருத்தாக உள்ளது.

அந்த பெருமைமிகு நூலகத்தை மீண்டும் புதுப் பொலிவுடன் இந்த அரசு மாற்றும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதைப் போன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் பிரம்மாண்ட நூலகங்கள் திறக்கப்பட்டால் அனைத்து தமிழக மாணவர்களும் பயனடைவார்கள்.

ஒரு அம்மா உணவத்தின் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்பட்டதற்குப் பொங்கியவர்கள், அத்தனை கோடி செலவு செய்து மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட நூலகத்தை மாற்ற முயற்சித்த போது தமிழ்நாட்டில் இல்லாமல் வேறு எங்கோ சென்றுவிட்டார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

வயிற்றுப் பசி எவ்வளவு முக்கியமோ அதை விட கல்விப்பசியும் முக்கியம்தான்.

படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைப்பவர்களிடம் போய்க் கேளுங்கள், பொங்கல் வேண்டுமா புத்தகம் வேண்டுமா என்று கேட்டால் புத்தகம்தான் வேண்டும் என்று கேட்பார்கள். கல்விப் பசி ஆற்றிவிட்டால் வயிற்றுப் பசியும் காணாமல் போய்விடும்.

#Vetri Vel

You may also like
ஜெயக்குமாரை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம்..!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் : வரலாறு படைத்தது மு.க.ஸ்டாலின் அரசு!!
சீமான் தம்பிகளுக்கு புத்தி எப்போ வரும்? – Arulraj

Leave a Reply