Home > கட்டுரைகள் > 48 வருஷமா ஒரே பொய்யை சொல்ல வெக்கமா இல்லையா?

48 வருஷமா ஒரே பொய்யை சொல்ல வெக்கமா இல்லையா?

சர்க்காரியாதான் சொல்லி விட்டாரே விஞ்ஞான ஊழலென்று !!சரி, சர்க்காரியா சொல்லி இது வரை 48 ஆண்டுகள் முடிந்து விட்டன, இதுநாள் வரை எதை பிடிங்கிக்கொண்டு இருந்தீர்கள், என்ன கிழித்தீர்கள்?

கலைஞர் உங்கள் முன்தானே அரசியல் செய்து இருந்தார், ஆட்சி செய்து கொண்டிருந்தார் ஏன் புகாராதாரத்தை மெய்ப்பிக்க வில்லை? யார் தடுத்தது உங்களை?

திமுக ஆட்சிக்காலத்தில் காலத்தில் செயா மீது போடப்பட்ட வழக்கில் செயா ஆட்சிக்காலத்தில் வழக்கு மெய்ப்பிக்கப்பட்டு சிறை சென்றாரா இல்லையா?செயா பதவியை இழந்தாரா இல்லையா?

இப்போதெல்லாம் பையித்தியங்கள் கூட சொன்னதையே சொல்லுவதில்லை ! ஆனால் நீங்கள் 48 ஆண்டுகளாக ஆதாரமற்ற ஒரு இட்டுக்கட்டிய பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே! என்றாவது ஒரு நாள் இதன் ஆதாரம் எங்கிருக்கிறது என்று யோசித்ததுண்டா ?

பெரியார் சொன்னது போல அறிவு நாணயமற்றவர்கள் எதைப்பரப்பினாலும் மூடச்சுமையாக சுமந்தலைவது ஊரில் கண்ட இடங்களிலும் உளரிக்கொட்டுவது என்று மூடர் கூட்டமாக நேர்ந்து விட்டது போல ஏதோ புதிய கண்டி பிடிப்பு போல பேசுகிறீர்களே !கேவலமாக இல்லை?

நாங்கள் பேசிக்கொண்டிருந்த அறை சிறிது நிமிடம் மௌனமாகியிருந்தது.. மீண்டும் ஆரம்பித்தேன்.. சரி இப்போது ஒன்றும் கெடவில்லை, இனி கூட முடிந்தால் ஆதாரத்தை கொடுங்கள், மெய்ப்பியுங்கள் என் தலைவருக்கு பதிலாக தண்டணையை நாங்கள் ஏற்கிறோம்.

என் தலைவர் கலைஞர் பல தமிழர்களை வளர்த்து என் தமிழகத்தையும் செழிக்கச்செய்தவர் அதற்கு ஆதாரம் எத்தனை வேண்டும் ? என் தந்தை என்னை மட்டுமே வளர்த்தார் ஆனால் என் தலைவர் மொத்த தமிழர்களையும் தன்மானத்தோடு கல்வி, பொருளாதாரத்தை நிரப்பி வளர்த்தவர்.

அவருக்கு இன்னும் பல தலைமுறை நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தினைத்துணை நன்றி செய்யினும் பனை த்துணையாக கொள்வர் பயன் தெரிவார்..

Murugan Kuruswamy

Leave a Reply