Home > கட்டுரைகள் > கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!

கொரிய தமிழ்ச் சங்கம் மற்றும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்திய “பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை” எனும் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்த அரசியல் ஆளுமைகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், ஊடகதுறையினர் மற்றும் அறிவியலாளர்கள் அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

நிகழ்ச்சியினை அழகாக திட்டமிட்டு திறம்பட வழிநடத்திய நிகழ்ச்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், இணைச்செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ், தொழிநுட்பத்துறை முதன்மைப் பொறுப்பாளர் பொறியாளர். சகாய டர்சியூஸ், இணைச்செயலாளர் முனைவர். மோ.பத்மநாபன், தலைவர் முனைவர். இராமசுந்தரம், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். லோ.ஆனந்தகுமார் ஆகியோருக்கு கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது.

மேலும் முதன்மைப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து தகுந்த ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டிய ஒருங்கிணைப்பாளர்கள் துணைத்தலைவர் முனைவர் கிறிஸ்டி கேத்தரின், செயலாளர். முனைவர் ராமன் குருசாமி, அறிவுரைக்குழு முனைவர். இரா.அச்சுதன், செயல்பாட்டுக்குழு முனைவர் பாஸ்கரன் புருசோத்தமன், கொள்கைக்குழு முனைவர் அந்தோணி ஆனந்த், எதிர்கால ஆளுமைகள் முனைவர் செ.அரவிந்தராஜா மற்றும் பொறியாளர் ப.பிரதீப்குமார், தொழில் நுட்பம் பொறியாளர் ஆனந்த முத்துச்சாமி மற்றும் மூத்த உறுப்பினர். இரா.யசோதா ஆகியோருக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் இசைத்த வளரும் இசைக்கலைஞர் செல்வன். சர்வேஷ் பாரதிராஜா அவர்களுக்கும், சிறப்பான வரவேற்புரை நடனமாடிய மெட்ரோ நாட்டியாலயா மாணவி எஸ்.பி.சுபா காவ்யா அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

இறுதியாக இந்த இணையவழி கலந்துரையாடலானது வெகுஜன மக்களிடமும் சென்று சேர்ந்திருப்பது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்றாக அமைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை வெற்றியாக்கிய பொது மக்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

You may also like
பெண்களே ஒருங்கிணைத்த கொரியா தமிழ்ச்சங்க இணையவழி கலை இலக்கிய விழா – 2020
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2
கொரியா தமிழக உறவுகளுக்கு இலக்கிய – அறிவியல் சான்றுகளுடன் உலகத் தமிழ்ச்சங்க கருத்தரங்கில் முனைவர் ஆரோக்கியராஜ் பேச்சு!
கொரியா தமிழ் உறவுக்கு நினைவுச்சின்னமும் – கொரியாவில் தமிழ் இருக்கையும் அமைத்திடுக

Leave a Reply