Home > கட்டுரைகள் > கொரியா தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையில் புதிய மைல்கல் -Korea Tamil Similarity – கொரியா தமிழ் ஒற்றுமை – Dr. Arokiyaraj,

கொரியா தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமையில் புதிய மைல்கல் -Korea Tamil Similarity – கொரியா தமிழ் ஒற்றுமை – Dr. Arokiyaraj,

கொரியா தமிழ் உறவு குறித்து பல தகவல்கள் வெளியானபோதும், கொரியா மொழிக்கும் தமிழ்மொழிக்கும் இடையிலான உறவுகள் குறித்து வெளியான அளவுக்கு, கொரியா தமிழ் பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவுமுறைகள், வழிபாட்டு ஒற்றுமைகள் குறித்த விழிப்புணர்வு சமீபத்தில்தான் அதிகரித்துள்ளது.

தென்கொரியாவில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஆரோக்கியராஜ் இதற்கான பெருமையைப் பெறுகிறார். கொரியா மொழியில் இடம்பெற்றுள்ள தமிழ் வார்த்தைகளின் ஒற்றுமை, விளையாட்டு ஒற்றுமைகள், உணவு ஒற்றுமைகள் குறித்து கொரியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைந்து ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டார்.

அந்த வீடியோ ஏற்படுத்திய விளைவை இதுவரையான எந்த ஆய்வும் ஏற்படுத்தவில்லை. அதன்பிறகு கொரியா தமிழ் ஒற்றுமை குறித்து அறிய கொரியர்கள் ஏராளமாக விரும்பினர். இதையடுத்து, பேராசிரியர் டாக்டர் ஆரோக்கியராஜ் இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து, ஒரு கட்டுரை வெளியிட்டார். அந்தக் கட்டுரை 2020 அக்டோபர் மாதம் வெளியான சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (SHANLAX INTERNATIONAL JOURNAL OF TAMIL RESEARCH) வெளியானது. இந்த ஆய்வு குறித்து ஏற்கெனவே, உலகத்தமிழ்ச்சங்க இணைய கருத்தரங்கில் ஆரோக்கியராஜ் பேசியபோதும் நல்ல வரவேற்புப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
https://doi.org/10.34293/tamil.v5i2.3477
Korea Tamil Similarity, கொரியா தமிழ் ஒற்றுமை, arokiyaraj, korea, food and cultural similarities found between Korea and Tamil culture of India கொரியா,

You may also like
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறித்து ஆன்லைன் கருத்தரங்கம்!
தமிழ்-கொரிய மொழி ஒற்றுமை- கொரியா தமிழ் ராணி செம்பவளம் எங்கிருந்து போனார்?
கொரியா – தமிழ் உறவு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கொரியா தமிழ்சங்கம் நன்றி!
கொரியா – தமிழக பழங்காலத் தொடர்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் தொல் திருமாவளவன் பங்கேற்பு

Leave a Reply