Home > கட்டுரைகள் > என் வாழ்க்கை திராவிடம் தந்தது

என் வாழ்க்கை திராவிடம் தந்தது

எப்ப பாத்தாலும் திமுக திமுக ன்னு லூசு மாதிரி சுத்திகிட்டு இருக்கியே ஏன்னு என் நண்பர்கள் சிலர் கேட்டார்கள். அவர்களுக்கான பதில். என் பெற்றோர்,

முன்னோரை விட நான் எந்தவகையிலும் மிகப்பெரிய உழைப்பாளியோ அல்லது அறிவாளியோ கிடையாது.

ஆனாலும் அவர்கள் அடையாத உயரம் நான் அடைய யார் காரணம் என்று அறிய முயன்றதன் விளைவே என் திராவிட இயக்க ஆதரவு.

நான் மட்டுமே முன்னேறியிருந்தால் கூட ஏதோ அதிர்ஷ்டம் காரணம் என்று தோன்றி இருக்கும்.

ஆனால் என்னைச்சுற்றி உள்ள சுற்றத்தாரின் உறவுகளும் அவர்களின் முன்னோர்களை விட மிக சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.

அது எப்படி என்ற தேடலின் முடிவே எனது இயக்க ஆதரவு. “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மானப் பெரிது.”

காலத்தினால் செய்த ஒரு சிறிய உதவியே அந்த உலகை விட பெரியது என்ற வள்ளுவன் வாக்கை உணர்ந்துதான், ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னென்ன தேவையோ அதை அத்தனையும் எந்த கைமாறும் இல்லாமல் உதவி செய்த இயக்கத்திற்கு நான் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டுள்ளேன்.

சில மேதாவிகள் சொல்வது போல் கரைவேட்டிக்கு கல்வி நிலையங்களில் என்ன வேலை என்று அந்த கரைவேட்டிகள் நினைத்திருந்தால் நான் எங்க கிராமத்தில் மாடு மேய்த்துக்கொண்டு தான் இருந்திருப்பேன்.

என்னுடைய முயற்சி என்பது நாம் எந்த இயக்கத்தால் பயன்பெற்றோம், எவ்வாறு பயன்பெற்றோம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவதே. ஆதாரம் இல்லாமல் அவதூறு சொல்வதல்ல.

Natarajan Kandasamy

You may also like
புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன் பதறும் காங்கிரஸ்!
முஸ்லிம் லீக் கேட்ட 16 க்கு மு.க.ஸ்டாலின் பதில் என்ன?
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம்

Leave a Reply