Home > கட்டுரைகள் > நடராஜ் இனி கூலர்ஸை கழற்றாதே

நடராஜ் இனி கூலர்ஸை கழற்றாதே

Narasimman Naresh

நடராஜன் கூலர்ஸ் போட்டு சிட்னியில் எடுத்த போட்டோக்கள் வைரல் ஆனது. தினமலர், ஆசியாநெட் போன்றவர்களின் வயிறு எரிந்தது.

அன்றொருநாள் தவில் வாசித்த சிவக்கொழுந்து வியர்வை வழிவதை தடுக்க இடுப்பில் இருந்த துண்டை தோளுக்கு ஏற்றினார், ஆனால் சபைக்கு பயந்து கீழே இறக்க முற்படும் போது பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சர் அழகிரி அவர்கள் ” சிவக்கொழுந்து துண்டை எடுக்காத , என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம் என கத்திய நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது.

பின்நாளில் திராவிட இயக்க மேடைகளில் துண்டு போர்த்துவது வாடிக்கையானது. சாதாரண நிகழ்வு சரித்திரம் ஆனது. அப்படி தான், நான் சிங்கப்பூர் வந்த புதிதில் ஆசைப்பட்டது “KAPA” t.shirt, ஒரு கூலிங் க்ளாஸ்.

இது அந்த வயசுக்கான இயல்பு. இந்த இயல்பான ஒன்றைக் கூட சிலரால் ஜீரணிக்க முடியலனைன்னா அவர்களுக்கு நாம் கல்வி என்ற பெறும் செல்வத்தை அடைய மனம் வந்திருக்குமா என்பதை யோசித்து பார்க்கனும்.

இது புரியாமல் தான் கம்பர் படிக்கலையா? தொல்காப்பியர் படிக்கலையா என கிளம்பி வருவாங்க. அப்படி கிளம்பி வர்றவன் தாத்தா, அப்பா என்ன படிச்சாங்கன்னு கேட்டால் பதில் வராது.

குணசேகரன், செந்தில் வடிவேல், சேவியர்கள் ஊடகத்துறையில் முத்திரைப் பதிக்கும் போது ஊடகத்துறை தீட்டுப்பட்டது.

திமுக ஆட்சி அமைத்த போது தமிழ்நாடு ஆரியர்கள் வாழ தகுதி அற்றதாகிவிட்டது. மனுஷ்ய புத்திரன்கள், அப்துல்லாக்கள், சென் பாலன்கள், ராஜராஜன்கள் இலக்கியம் படைத்தால் இலக்கியம் தீட்டுப்பட்டு போய்டுத்து.

இளையராஜா இசையமைத்த போது சங்கீதம் கூட காக்கா கத்துறது போல இருந்தது. நடராஜன் கிரிக்கெட் விளையாட்டில் பெயர் வாங்கும் போது கிரிக்கெட் சாதாரண விளையாட்டு ஆகிப்போனது.

அன்றைக்கு அய்யா பட்டுக்கோட்டை அழகிரி சிவக்கொழுந்துக்கு சொன்னது தான் நடராஜ்க்கும். நடராஜ்,” இனி கூலர்ஸை கழட்டாதே”. விக்கெட் எடுத்தால் எழும்பி குதி, ஆர்ப்பாரி, நீ உன்னை கொண்டாடு, அது உனக்கு சுய உற்சாகம் அளிக்கும்.

இளையராஜாக்கள், குணசேகரன்கள், சேவியர்கள் , அப்துல்லாக்கள், மனுஷ்கள், சென்.பாலன்கள்ப் என யாரும் இவர்களுக்கு அடங்கிப் போகல மாறாகப்வெற்றிக் கொடி கட்டுகின்றனர்.

அதுவே அவாக்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணமாக உள்ளது. நீயும் இவர்களை பார்த்து சோர்ந்து போகாத. அடுத்த மேட்ச்ல விக்கெட் எடுக்கலைன்னா இவனுங்க பேச்சு எல்லாம் மேட்ச் பற்றி இருக்காது. உன்னைப்பற்றி தான் இருக்கும். நீ பச்சைக் குற்றிக் கொண்டதே இவர்களுக்கு வலிக்குது என்றால் உன் உருவத்தை எதிர்கால இளையர்கள் பச்சைக் குற்றிக் கொள்ளும் அளவுக்கு உயர வேண்டும் என. வெறி கொள்.

You may also like
தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்
“சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது”
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்

Leave a Reply