தேவையானவை:
வாழைத்தண்டு – 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பொட்டுக்கடலை – 150 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய பச்சை மிளகாய் – 3
துருவிய கேரட் – ஒன்று
எண்ணெய், சோம்பு, உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். நறுக்கிவைத்த வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு போட்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து வடை வடிவில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் வாழைத்தண்டு வடை தயார்.