Home > மகளிர் பகுதி > சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மறைய

சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மறைய

சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மறைய

பஞ்சு நனைத்த பன்னீரை 2-3 தடவை முகத்தில் தடவவும்.

ஆரஞ்சு தொலியை தண்ணீர் விட்டு அரைத்து, அதை முகத்தில்
பூசி வர பருக்கள் குறையும்.

கருஞ்சீரகத்தை வினிகருடன் சேர்த்து அரைத்து பூசி வரலாம்.

1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் 1 தேக்கரண்டி தூளாக்கிய
பட்டையை கலந்து தடவி வர பருக்கள் மறையும்.

சிறிது பூண்டு அரைத்து பூசி வர பருக்கள் மறையும்.

வேப்ப இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து பூசி வர பருக்கள்
மறையும்.

1/2 தேக்கரண்டி சந்தனத்துடன் சிறிது மஞ்சள் தண்ணீர் விட்டு
அரைத்து பூசி வரலாம்.

எலுமிச்சை சாற்றையும் பன்னீரையும் சம அளவு சேர்த்து முகத்தில்
தடவி 1/2 மணி நேரம் ஊறிய பின் கழுவி வர, பருக்கள் மறையும்.

புதினா அரைத்த சாற்றை இரவு தினந்தோறும் தடவி வர பருக்கள் மறைவதுடன் முக வறட்சியையும் குறைக்கும்.

முந்திரியை சிறிது எடுத்து காய்ச்சாத பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் வெந்நீரில் கழுவி வர பருக்கள் 3-4 தினங்களுக்குள் மறைய தொடங்கும்.

எலுமிச்சை சாற்றை முதல் நாள் இரவு முகத்தில் தடவி, மறுநாள்
காலையில் வெந்நீரில் கழுவி வர, பருக்கள் குறையும்.

வெங்காயத்தை பாதியாக நறுக்கி முகப்பரு உள்ள இடத்தில் அழுந்த தேய்த்து வந்தால் இரண்டு மூன்று நாட்களில் முகபரு மறைந்து விடும்.

Leave a Reply